Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

18th May 2020 23:45:23 Hours

புதிதாக நியமிக்கப்பட்ட எஸ்எல்எஸ்ஆர் படையணி தளபதியின் கடமை பொறுப்பேற்பு நிகழ்வு

இலங்கை சிங்க படையணியின் 13 ஆவது படைத் தளபதியாக மேஜர் ஜெனரல் ஜயந்த செனவிரத்ன அவர்கள் 18 ஆம் திகதி திங்கட்கிழமை அம்பேபுஸ்ஸயில் உள்ள இலங்கை சிங்க படையணி தலைமையகத்தில் இராணுவ சம்பிரதாய முறைப்படி தனது கடமையைப் பொறுப் பேற்றுகொண்டார்.

அங்கு வருகை தந்த புதிய தளபதியவர்கள் இலங்கை சிங்க படையணி தலைமையகத்தின் மத்திய கட்டளை தளபதி பிரிகேடியர் அஜித் பல்லேவல அவர்களினால் வரவேற்கப்பட்டார். அதன் பின்னர் அவர் யுத்ததின்போது உயிர் நீத்த சிங்க படையணியின் படையினரின் நினைவு தூபிக்கு மலர் அஞ்சலி செலுத்தினார்.

இந் நிகழ்வில் சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் ஏனைய படையினர் உள்ளிட்டோர் அவருடன் போர் வீர்ர்களின் நினைவுத்தூபிக்கு நினைவஞ்சலி செலுத்தும் நிகழ்வில் 19 ஆம் திகதி கொண்டாடப்பட வேண்டிய 11 ஆவது போர் வீரர்கள் தினத்தினை அதற்கு முன்னதான நாளில் கொண்டாடும் முகமாக கலந்து கொண்டனர்.

மேஜர் ஜெனரல் ஜயந்த செனவிரத்ன அவர்கள் மத சம்பிரதாய ஆசீர்வாதங்களுக்கு மத்தியில் உத்தியோகபூர்வ ஆவணத்தில் கையொப்பமிட்டு தனது பதவியை பொறுப்பேற்றுக் கொண்டார். இதன்போது இலங்கை சிங்க படையணியின் பணியாற்றும் அனைத்து அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

அதன் பின்னர், இந்த நிகழ்வின் அடையாளமாக படைத் தலைமையக வளாகத்தில் ஒரு ‘மா’ கன்றையும் நட்டுவைத்தார். அதனைத் தொடர்ந்து சார்ஜென்ட்ஸ்’ இல்லத்தில் ஆனை அல்லாத அதிகாரிகளால் ஒழுங்கமைக்கப்பட்ட தேநீர் விருந்துபசாரத்திலும் கலந்துகொண்ட அவர் படையினர்களிடம் தனது எண்ணங்களையும் முந்தைய நினைவுகளையும் பகிர்ந்துகொண்டார்.

அத்துடன் பணி மற்றும் கடமைகள் முக்கியத்துவம் தொடர்பாக மேஜர் ஜெனரல் செனவிரத்ன அவர்கள் படையினர்களுக்கு உரையாற்றினார். பின்னர், அவர் அனைத்து படையினர்களுடன் மதிய உணவிற்கு செல்வதற்கு முன்னர், குழு புகைப்படத்திலும் கலந்துகொண்டார்.

இந்த நிகழ்வில் சிரேஷ்ட அதிகாரிகள், அவர்களின் துணைவியர், அனைத்து அதிகாரிகளும், அதிகாரிகள் மற்றும் படையினர் உட்பட பலர் கலந்துகொண்டனர். Best Authentic Sneakers | Men’s shoes