Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

11th August 2021 20:00:08 Hours

புகழ்பெற்ற லெப்டினன்ட் ஜெனரல் டென்சில் கொப்பேகடுவ மற்றும் ஏனைய போர் வீரர்களின் 29 ஆம் ஆண்டு நினைவுத் தினம்

பாதுகாப்பு பதவி நிலை தளபதியும் இராணுவ தளபதியும் கொவிட் – 19 பரவல் தடுப்புக்கான தேசிய செயல்பாட்டு மையத்தின் தலைவருமான ஜெனரல் ஷவேந்திர சில்வா அவர்களினால் இராணுவத்தின் மே 2009 க்கு முன்னர் நாட்டின் பாதுகாப்பிற்காக தங்கள் உயிர்களை அர்ப்பணித்த போர் வீரர்களின் விலைமதிப்பற்ற தியாகங்களை நினைவூட்டும் வகையில், 8 ஆகஸ்ட் 1992 அன்று விடுதலைப் புலிகளின் கண்ணிவெடி தாக்குதலுக்கு இலக்காகி பலியான புகழ்பெற்ற போர்வீரர், லெப்டினன்ட் ஜெனரல் டென்சில் கொப்பேகடுவ மற்றும் ஒன்பது போர்வீரர்கள் நினைவுக்கூறும் வகையில் அராலித்துறையில் நிர்மாணிக்கப்பட்டுள்ள டென்ஸில் கொப்பேகடுவ அருங்காட்சியகத்தை திறந்து வைத்தார்.

மறைந்த லெப்டினன்ட் ஜெனரல் டென்சில் கொப்பேகடுவ மற்றும் அவருடன் வந்த அணியின் மேஜர் ஜெனரல் விஜயா விமலரத்ன, ரியர் அட்மிரல் மொஹான் ஜெயமஹா, லெப்டினன்ட் கேணல் எச்.ஆர் ஸ்டீபன், லெப்டினன்ட் கேணல் ஜீஎன் அரியரத்ன, லெப்டினன் கேணல் வைஎன் பிலிபன, கொமாண்டர் அசங்க லங்காதிலக, லெப்டினன் கேணல் அல்விஸ் டீ சில்வா, லெப்டினன் கொமாண்டர் சீ.பீ. விஜேபுர மற்றும் சாதாரண சிப்பாய் டபிள்யூ. ஜே. விக்கிரமசிங்க ஆகியோரை நினைவுக்கூறும் வகையில், இராணுவ தளபதியின் ஆலோசணைக்கமைய இராணுவ பதவி நிலை பிரதானியும் யாழ். பாதுகாப்பு படைத் தலைமையக முன்னாள் தளபதியுமான மேஜர் ஜெனரல் பிரியந்த பெரேரா அவர்களின் வழிகாட்டலின் கீழ் முன்னெடுக்கப்பட்டதுடன் அருங்காட்சியகம் ஆரம்பித்து வைக்கப்பட்டதன் பின்னனி கதையும் இதன்போது வாசிக்கப்பட்டது.

மேஜர் ஜெனரல் ஜகத் கொடிதுவாக்கு மற்றும் 51 வது படைப் பிரிவு தளபதி மேஜர் ஜெனரல் தீபால் புஸ்ஸெல்ல, 52 வது படைப்பிரிவு தளபதி மேஜர் ஜெனரல் ஹரேன் பீரிஸ் ஆகியோருடன் இணைந்து பிரதம விருந்தினருக்கு வரவேற்பளித்தார். மலர் அஞ்சலி செலுத்தப்படுவதற்கு முன்பாக வட்ட வடிவ சுவர் மற்றும் அருங்காட்சியகத்தில் பதிக்கப்பட்ட பத்து போர் வீரர்களின் முழு நீள உருவப்படங்களுக்கு மரியாதையும் செலுத்தப்பட்டது. இந்நிகழ்வில் பெளத்த, இந்து கிறிஸ்த்தவ, மற்றும் இஸ்லாமிய மத போதகர்கள் கலந்துகொண்டதுடன் அவர்களினால் தாய்நாட்டிற்கு உச்சகட்ட அர்ப்பணிப்புக்களை மேற்கொண்ட போர் வீரர்களுகான மத வழிபாடுகளும் இடம்பெற்றன.

மேற்படி புனித நிகழ்வின் போது தளபதி சீராண நடையில் சென்று இன்றளவிலும் நிஜமான வீரராக போற்றப்படும் மறைந்தும் புகழ்பெற்ற லெப்டினன் ஜெனரல் டென்சில் கொப்பேகடுவ அவர்களின் நினைவுச் சின்னத்திற்கு மலர் அஞ்சலி செலுத்தினார். பின்னர் ஜெனரல் சவேந்திர சில்வா கஜபா படையணியின் ஸ்தாபகத் தந்தையும் மற்றும் இலங்கை இராணுவத்தின் சிறந்த களத் தளபதிகளில் ஒருவருமான புகழ்பெற்ற போர்வீரர் மேஜர் ஜெனரல் விஜய விமலரத்னவினின் படத்திற்கு மலர் அஞ்சலி செலுத்தினார். அத்தோடு உருவப்படத்திற்கு மலர் மாலையும் சூட்டி அஞ்சலி செலுத்தினார். அதேநேரம் மேற்படி குண்டு வெடிப்பின் போது உயிர் நீத்த கடற்படை மற்றும் இராணுவப் போர் வீரர்களின் நினைவாக சிரேஸ்ட கடற்படை அதிகாரிகள் மற்றும் பிற அதிகாரிகளால் அடுத்தடுத்து மலர் மாலைகள் அணிவித்து அஞ்சலி செலுத்தினர். குண்டு வெடிப்பில் சிக்கிய துரதிருஷ்டவசமான வாகனம் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

தேசிய கீதம் இசைத்தல், இரண்டு நிமிட மௌன அஞ்சலி, தீபம் ஏற்றுதல், நினைவுச்சின்னத்தை வாசித்தல் மற்றும் முப்படை மரியாதை அணிவகுப்பு ஆகிய நிகழ்வுகள் இடம்பெற்றிருந்ததுடன், இறுதியாக உயிர் நீத்தவர்களுகான சம்பிரதாய ஒலி இடுகையினை தொடர்ந்து நிகழ்வு நிறைவை எட்டியிருந்ததுடன் இந்த நிகழ்வு சுகாதரார வழிமுறைகளை கடைப்பிடித்து இடம்பெற்றது.

யாழ். அராலித்துறையில் இடம்பெற்ற நிகழ்வில் 51 வது படைப்பிரிவுத் தளபதி மேஜர் ஜெனரல் தீபால் புஸ்ஸல்ல , 52 வது படைப்பிரிவு தளபதி மேஜர் ஜெனரல் ஹரேன் பீரிஸ், 55 வது படைப்பிரிவு மேஜர் ஜெனரல் மஹிந்த ஜெயவர்த்தன, பிரிகேட் தளபதிகளும், ஏனைய சிப்பாய்களும் கலந்துகொண்டனர்.