Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

22nd November 2021 15:00:57 Hours

பீரங்கி பாடசாலையில் மீண்டும் 122 மிமீ பீரங்கி சூடு பயிற்சி ஆரம்பம்

பீரங்கி பாடசாலை 122 மிமீ பீரங்கி குழல் உதவியுடன் 7 ஆண்டுகளுக்குப் பிறகு நவம்பர் 19 ம் 20 ம் திகதிகளில் டெம்பிட்டிய பீரங்கிச் சூடு களத்தில் அடிப்படை பீரங்கிச் சூட்டு பயிற்சியை மீண்டும் தொடங்கியது.

இலங்கை பீரங்கி படையணியின் படைத் தளபதியும் பிரதி இராணுவ பதவி நிலை பிரதானியுமான மேஜர் ஜெனரல் சம்பத் கொடுவேகொட, பீரங்கி பிரிகேட் தளபதி பிரிகேடியர் தம்மிக்க வெலகெதர , பீரங்கி பயிற்சி பாடசாலையின் தளபதி கேணல் ரொஷான் கன்னங்கர மற்றும் அதிகாரிகள் பல ஆண்டுகளுக்குப் பிறகு களப்பயிற்சி மீண்டும் தொடங்குவதைக் காண அங்கு வந்திருந்தனர்.

ஏப்ரல் 2014 இல், கள சூட்டு பயிற்சி நிகழ்வுகள் மதுருஓயா கள துப்பாக்கிச் சூடு களத்தில் முடிவுக்கு கொண்டு வரப்பட்டன. இருப்பினும், சில 120 மிமீ லைட் மோட்டார்களை சுடுதல், தெம்பிட்டியவில் உள்ள புதிய கள சூட்டு களத்தில் அதன் சுற்றுக்களை 16 ஜூலை 2021 அன்று தொடங்கியது.

நீண்ட துப்பாக்கி பதவி நிலை பாடநெறி , படையினர் தலைமைத்துவ பாடநெறி, மதிப்பாய்வு, இலக்கு கையகப்படுத்தல் பாடநெறி மற்றும் பின் தள பாடநெறி ஆகியவற்றின் மாணவர்கள் டெம்பிட்டியவில் 122 மிமீ துப்பாக்கி குழல்களின் கள துப்பாக்கிச் சூட்டு பயிற்சியில் பங்கேற்றனர்.

மேலும்,மேற்கு பாதுகாப்பு படை தலைமையகத்தைச் சேர்ந்த 10 அதிகாரிகள், 4 அதிகாரிகள் மற்றும் பீரங்கிப் படையணியின் 57 சிப்பாய்கள் அந்த பீரங்கிச் சூட்டு பயிற்சியில் பங்கேற்றனர் .