Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

31st August 2020 13:30:05 Hours

பீரங்கி பயிற்சி பாடசலைக்குபுதிய படைத் தளபதி பதவியேற்பு

கேணல் ரோஹான் மெதகொட அவர்கள் பீரங்கி பயிற்சி பாடசலையின் 28 ஆவது படைத் தளபதியாக மத ஆசிர்வாதம் மற்றும் இராணுவ சம்பிரதாய முறைப்படி 25 ஆம் திகதி செவ்வாய்கிழமை தலைமையகத்தில் வைத்து கடமை பொறுப் பேற்றுகொண்டார்.

புதிதாக நியமிக்கப்பட்ட படைத் தளபதி பதவி நிலை அதிகாரிகளால் வரவேற்கப்பட்டதுடன், பீரங்கி படையணியின் படையினரால் நுழைவாயிற் வரவேற்பு மரியாதை வழங்கப்பட்டது. பின்னர், இந்த நிகழ்வின் நினைவாக படைத் தலைமையக வளாகத்தில் மரக்கன்றொன்றை நட்டுவைத்தார். தொடர்ந்து சிரேஷ்ட அதிகாரிகளின் முன்னிலையில் மத ஆசிர்வாததுக்கு மத்தியில், உத்தியோகபூர்வ ஆவனத்தில் கையொப்பமிட்டு கடமை பொறுப்பேற்றுக்கொண்டார்.

பின்னர், அவர் பாடசாலையில் உள்ள அனைத்து படையினர் மத்தியில் உரையாற்றினார். இந்நிகழ்ச்சியில் பதவி நிலை அதிகாரிகள் , அதிகாரிகள் மற்றும் இராணுவ சிப்பாயினர் உட்பட பலர் கலந்து கொண்டனர். Sports Shoes | Nike React Element 87