Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

05th November 2021 06:05:12 Hours

பீரங்கி படையணி படைத் தளபதி துப்பாக்கிச் சுடும் செயன்முறைகளை தொடர்பில் மேற்பார்வை

மின்னேரியாவில் தெம்பிட்டியவில் உள்ள பீரங்கி படையணிப் பயிற்சி கல்லூரியின் துப்பாக்கிச் சுடுதல் களத்தின் துப்பாக்கிச் சுடுதல் செயன்முறைகள் இலங்கை இராணுவத்தின் பிரதி பதவி நிலை பிரதானியும் இராணுவ பீரங்கி படையணியின் படைத் தளபதியுமான மேஜர் ஜெனரல் சம்பத் கொட்டுவேகொட, பீரங்கி பிரிகேடின் தளபதி பிரிகேடியர் தம்மிக்க வெலகெதர மற்றும் இலங்கை இராணுவ பீரங்கி படையணி பயிற்சி கல்லூரியின் தளபதி கேணல் ரொஷான் கன்னங்கர ஆகியோரின் பங்குபற்றலில் ஒக்டோபர் 29-30 திகதிகளில் நடைபெற்றது.

குழு கட்டளை அதிகாரிகளின் புத்துணர்ச்சி பயிற்சி, நீண்ட துப்பாக்கிதாரிகள் பணிநிலை பாடநெறி, அளவீட்டு மற்றும் இலக்கெடுத்தல் பாடநெறி மற்றும் பின்னய நிலைப் பாடநெறி ஆகியவற்றில் கலந்து கொண்டவர்கள் 120 மிமீ இலகு மோர்டார்களைப் பயன்படுத்தி அந்த களச் சூடு பயிற்சிகளில் பங்கேற்றனர்.