Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

15th May 2019 15:51:42 Hours

பீரங்கிப் படையணியின் புதிய பிரிக்கட் படைத் தளபதி பதவியேற்பு

இலங்கை இராணுவ பீரங்கீப் படையணியின் 20 ஆவது புதிய பிரிக்கட் படைத் தளபதியாக பிரிகேடியர் மஞ்சுள கருணாரத்ன அவர்கள் இம் மாதம் (13) ஆம் திகதி பனாகொடையிலுள்ள பீரங்கி பிரிக்கட் தலைமையகத்தில் தனது பதவியை உத்தியோகபூர்வமாக பதவியேற்றார்.

இதற்கு முன்பு இவர் புத்தளையிலுள்ள இராணுவ அதிகாரிகளின் தொழில் வளர்ச்சி மையத்தில் பிரதி கட்டளை தளபதியாக கடமை வகித்தார்.

பிரிக்கட் தலைமையகத்திற்கு வருகை தந்த புதிய படைத் தளபதியை நுழைவாயிலில் வைத்து இராணுவ சம்பிரதாய முறைப்படி அணிவகுத்து படையினர் வரவேற்றனர். பின்னர் படைத் தளபதி பணிமனைக்கு வருகை தந்து கையொப்பமிட்டு தனது புதிய பதவியை பொறுப்பேற்றார்.

அதன் பின்பு படையினர் மத்தியில் பணிகள் தொடர்பான விடயங்களை உள்ளடக்கி சிறப்புரை ஆற்றினார். இச்சமயத்தில் இராணுவ சிரேஷ்ட அதிகாரிகளும் இணைந்திருந்தனர். bridgemedia | Archives des Sneakers