16th June 2023 20:44:50 Hours
வயம்ப பயிற்சி நிறுவனம், முதலாவது இலங்கை தேசிய பாதுகாவலர் படையணி மற்றும் முதலாவது இலங்கை இராணுவ மகளிர் படையணி இணைந்து "ஹரிதநியமுவோ" எனும் 09 வது 'விவசாய அறிவு மேம்பாடு மற்றும் தலைமைத்துவ மேம்பாட்டுப் பட்டறை', சனிக்கிழமை (ஜூன் 10) வாரியபொல வயம்ப பயிற்சி நிறுவன வளாகத்தில் முன்னெடுக்கப்பட்டது.
குருநாகல் மாவட்ட மீகஹகொடுவ ரெமாண்ட் ஹோமில் வசிக்கும் 70 பிள்ளைகளுக்கு விவசாய அறிவை வழங்கும் நோக்கில் இச் செயலமர்வு நடத்தப்பட்டது.
இராணுவம் மாணவர்களுக்கான உடற்பயிற்சி, தலைமைத்துவம் மற்றும் குழு நடவடிக்கைகள் தொடர்பிலான விரிவுரைகள் மற்றும் நடைமுறை அமர்வுகளை நடாத்தினர். இதனூடாக மாணவர்கள் தலைமைப் பண்பு, உலக உணவுப் பாதுகாப்புத் திட்டங்கள் மற்றும் பசுமை விவசாயம் போன்றவை பற்றிய அறிவைப் பெற்றுக் கொண்டனர்.
மேற்கு பாதுகாப்புப் படைத் தலைமையக தளபதியின் ஆசிர்வாதத்துடன் 14 வது காலாட் படைப்பிரிவின் தளபதியின் வழிகாட்டலின் கீழ் 143 வது காலாட் பிரிகேட் தளபதி மற்றும் முதலாவது இலங்கை தேசிய பாதுகாவலர் படையணியின் கட்டளை அதிகாரி ஆகியோரால் இச் செயலமர்வு கண்காணிக்கப்பட்டது.
இதே போன்ற செயலமர்வு குருநாகல் மாவட்டத்தில் சனிக்கிழமை (மே 27) நடத்தப்பட்டது. இச் செயலமர்வில் ஆர்ஜி சேனநாயக்க மகா வித்தியாலம் (தேசிய பாடசாலை) மற்றும் கொன்வெவ மகா வித்தியாலயத்தைச் சேர்ந்த மாணவர்கள் கலந்து கொண்டனர்.