Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

11th June 2020 10:05:24 Hours

பிலிப்பைன்ஸிலிருந்து வந்த 111 இலங்கையர்கள் தனிமைப்படுத்தல் மையங்களில் கோவிட் மையம் தெரிவிப்பு

பிலிப்பைன்ஸிலிருந்து இலங்கை சொந்தமான ஏர்லைன்ஸ் எண் யூஎல் -1423 விமானத்தின் மூலம் இன்று (11) ஆம் திகதி பிலிப்பைன்ஸிலிருந்து வந்த 111 இலங்கையர்கள் தனிமைப்படுத்தப்பட்ட மையங்களுக்கு இம் மாதம் 11 ஆம் திகதி அனுப்பி வைக்கப்பட்டதாக கோவிட் மையத்தினால் ஊடக வெளியீட்டின் போது தெரிவிக்கப்பட்டது.

அத்துடன் தனிமைப்படுத்தப்பட்ட மையங்களான டொல்பின் கிளப் ஹோட்டலிருந்த (12) பேரும், பஸ்சரையிலிருந்த (51) பேரும், கஹ்ஹொல்லாவிலுள்ள (32) பேரும், தனிமைப்படுத்தலின் பின்னர் சுகாதார சான்றிதழ்களுடன் தங்களது வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். மேலும் முப்படையினரால் பராமரித்து வரும் தனிமைப்படுத்தப்பட்ட மையங்களிலிருந்து இதுவரைக்கும் 12,628 பேர் தனிமைப்படுத்தலின் பின்பு தங்களது வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். அத்துடன் முப்படையினரால் பராமரித்து வரும் தனிமைப்படுத்தப்பட்ட மையங்களில் 4965 பேர் தனிமைப்படுத்தலுக்காக தங்க வைக்கப்பட்டுள்ளனர். இன்றைய தினம் 7 கடற்படையினர் கொரோனா வைரஸ்தொற்று நோய்க்கு உள்ளாகியுள்ளரென ஊர்ஜிதம் செய்யப்பட்டுள்ளது. அத்துடன் 10 கடற்படையினர் பூரண குணமடைந்து மருத்துவமனையிலிருந்து வெளியேறியுள்ளனர். jordan Sneakers | Nike Air Jordan XXX Basketball Shoes/Sneakers 811006-101 Worldarchitecturefestival