22nd September 2021 08:10:51 Hours
வெள்ளிக்கிழமை (17) நடைபெற்ற பிலிப்பைன்ஸ் தேசிய பாதுகாப்பு கல்லூரியின் (NDC) பொது பட்டமளிப்பு விழாவில் முதுநிலைப் கற்கையில் (தேசிய பாதுகாப்பு நிர்வாக பாடநெறி - 56 2020/2021) முதல் முறையாக சிறந்த ஆய்வறிக்கைக்கு தங்கப் பதக்கமும் கல்விச் சிறப்பிற்கான வெங்கலப் பதக்கமும் இலங்கை இராணுவ பிரிகேடியர் லங்கா அமரபால பெற்றுக் கொண்டார்.
83 சர்வதேச பட்டதாரிகள் பங்கு கொண்ட இந்த தேசிய பாதுகாப்பு நிர்வாகம் (MNSA) தொடர்பிலான முதுகலை பாடநெறியில் பிரிகேடியர் அமரபாலவுக்கு பிலிப்பைன்ஸ் கியூசன் நகர் ஜெனரல் எமிலியோ அகுனால்டோ முகாமில் இடம்பெற்ற விழாவில் இந்த அங்கீகரிக்கப்பட்ட விருதுகள் வழங்கப்பட்டுள்ளன. குறித்த பாடநெறியை பிலிப்பைன்ஸ் பாராளுமன்றத்தின் துணை சபாநாயகரும் கற்றமை குறிப்பிடத்தக்கது.
இந்த தேசிய பாதுகாப்பு கல்லூரியின் பட்ட பாடநெறியில் இராணுவம், கடற்படை , விமானப்படை மற்றும் தனியார் மற்றும் அரச துறையைச் சேர்ந்த சிவில் உறுப்பினர்கள், தொழில்நுட்ப மற்றும் நிர்வாக சேவைகள், சட்டத் துறை விண்ணப்பதாரர்கள் பல நாடுகளிலிருந்து தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்.
பிரிகேடியர் லங்கா அமரபால இந்த பட்டப்படிப்பில் இரண்டு பிரிவுகள் பதக்கங்களுடன் (தங்கம் மற்றும் வெண்கலம்) இந்த மதிப்புமிக்க கல்வி சிறப்பைப் பெற்ற முதல் இலங்கையர் ஆவார். பிரிகேடியர் லங்கா அமரபாலவின் சாதனையானது இராணுவத்தின் பொறியியலாளர் படையணிக்கு மட்டுமல்ல, முழு நாட்டிற்கும் பெருமை அளித்துள்ளது.
1963 இல் நிறுவப்பட்ட பிலிப்பைன்ஸ் தேசிய பாதுகாப்பு கல்லூரி பிலிப்பைன்ஸ் அரசாங்கத்தின் கல்வி, பயிற்சி மற்றும் தேசிய பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பு குறித்த ஆராய்ச்சியின் உயர் கல்வி நிலையமாகவும். பிலிப்பைன்ஸின் தேசிய பாதுகாப்பு கல்லூரியின் ஒரு வருட முதுகலை பட்டப்படிப்பில் தேசிய பாதுகாப்பு கொள்கை உருவாக்கம் மற்றும் நிர்வாகம் தொடர்பிலான பரந்த அளவிலான பட்டப்படிப்பு திட்டமாகும்.