23rd August 2021 15:17:01 Hours
மாதுரு ஓயா இராணுவப் பயிற்சிப் பாடசாலையின் (ஏடிஎஸ்) 37 வது தளபதியாக நியமிக்கப்பட்ட பிரிகேடியர் ரோஹித அலுவிஹாரே வெள்ளிக்கிழமை (20) தனது கடமைகளை பொறுப்பேற்றுக்கொண்டார்.
கடமையேற்பிக்காக வருகை தந்த புதிய தளபதிக்கு பாதுகாவலர் அறிக்கையிடல் மரியாதை வழங்கப்பட்டதுடன் சிரேஸ்ட அதிகாரிகளால் அன்புடன் வரவேற்று அலுவலகத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார். அதன்பிறகு, மத ஆசீர்வாதங்களுக்கு மத்தியில் தனது கடமையேற்பிக்கான அதிகாரப்பூர்வ ஆவணத்தில் கையொப்பமிட்டார். பின்னர், நிகழ்வின் நினைவாக பாடசாலை வளாகத்தில் ஒரு மாங்கன்றை நாட்டி வைத்ததுடன் , படையினருக்கும் உரையாற்றினார்.
பிரிகேடியர் ரோஹித அலுவிஹாரே இந்த நியமனத்திற்கு முன்பு தொண்டர் படையணித் தலைமையகத்தின் முதன்மைப் பணிநிலை அதிகாரியாக கடமையாற்றினார். மேஜர் ஜெனரல் அனில் சமரசிறி 65 வது படைப்பிரிவின் தளபதியாக நியமிக்கப்பட்டுள்ளதை அடுத்து இவர் குறித்த பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ளார்.
பயிற்சி பாடசாலையின் கட்டளை அதிகாரி கேணல் அனுருத்த சோலங்காராச்சி, சிரேஸ்ட அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் இந்த நிகழ்ச்சியில் பங்குபற்றினர்.