Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

08th July 2021 21:00:43 Hours

பிரதி பதவி நிலை பிரதானியால் இராணுவ ஆடைத் தொழிற்சாலை ஊழியர்களுக்கு பாராட்டு

அலவ்வ மற்றும் யக்கல ஆகிய பகுதிகளிலிலுள்ள இராணுவ ஆடைத் தொழிற்சாலைகளின் உற்பத்தி செயற்திறன் தொடர்பில் ஆராயும் முகமாக, இராணுவ பிரதி பதவி நிலை பிரதானியும் இராணுவ ஆடைத் தொழிற்சாலை முகாமைத்துவ சபையின் தலைவருமான மேஜர் ஜெனரல் வசந்த மாதொல அவர்கள் வியாழக்கிழமை(8) அவ்விடங்களுக்கான விஜயத்தை மேற்கொண்டார்.

வருகைத் தந்த தளபதிக்கு இராணுவ ஆடைத் தொழிற்சாலையின் தளபதி பிரிகேடியர் அசாத் இசதீன் மற்றும் பிரதி தளபதி பிரிகேடியர் அமில வாசகே மற்றும் நிறுவனத் முகாமையாளர் ( மேற்பார்வை) மேஜர் புத்திக்க பண்டார ஆகியோரால் வரவேற்பளிக்கப்பட்டதுடன், இராணுவ சம்பிரதாய முறையின் பிரகாரம் அவருக்கு பாதுகாவலர் அறிக்கையிடல் மரியாதையும் வழங்கப்பட்டது.

இந்நிகழ்வின் முதல் அம்சமாக அலவ்வ இராணுவ ஆடைத் தொழிற்சாலையில் அதிகாரிகளுக்கான புதிய உணவக கட்டிடத் தொகுதியை நிர்மாணிப்பதற்காக அடிக்கல் நாட்டி வைக்கப்பட்டது. அதனையடுத்து வருகை தந்த தளபதிக்கு கட்டுமான பணிகள் தொடர்பில் பொறியியல் சேவை படையினரால் விளக்கமளிக்கப்பட்டது. அது தொடர்பில் அறிவுரைகளை வழங்கிய தளபதி நிர்மாணப்பணிகள் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் தொடர்பில் கேட்டறிந்துக் கொண்டார். பின்னர் அலவ்வ தொழிற்சாலை வளாகத்தில் மரக்கன்று ஒன்றினையும் நாட்டி வைத்தார்.

அதே தினத்தில் (08) இராணுவ பிரதி பதவி நிலை பிரதானி இராணுவ ஆடைத் தொழிற்சாலை தளபதியின் வேண்டுகோளுக்கிணங்க யக்கலவிலுள்ள ஆடைத் தொழிற்சாலைக்கு விஜயம் மேற்கொண்டு உத்தேச புதிய கட்டிடத் தொகுதியை நிர்மாணிப்பதற்கான அடிக்கல்லையும் நாட்டி வைத்தார். இராணுவ ஆடைத் தொழிற்சாலையின் தளபதி பிரிகேடியர் அசாத் இசாதீன், பிரதி தளபதி பிரிகேடியர் அமில வாசகே மற்றும் தொழிற்சாலை முகாமையாளர் கேணல் டைடஸ் ஜயகொடி ஆகியோரால் சிறப்பு வரவேற்பளிக்கப்பட்டதுடன் 8 வது இலங்கை இலேசாயுத காலாட் படையணியின் சிப்பாய்களால் தளபதிக்கு பாதுகாவலர் அறிக்கையிடல் மரியாதை வழங்கப்பட்டது.

இதன் போது சுப வேளையில் இராணுவத்தின் புதிய ஆடைத் தொழிற்சாலை கட்டிடத்தை நிர்மாணிப்பதற்கான அடிக்கல்லை நாட்டி வைக்குாறு அழைப்பு விடுக்கப்பட்டதுடன், அந்த கட்டிடம் 100 அடி நீளம் மற்றும் 20 அடி பரப்பளவை கொண்டதாக அமைக்கப்பட உள்ளமை குறிப்பிடத்தக்கதாகும். அத்தோடு இராணுவத்திற்கு சொந்தமான மேற்படி ஆடைத் தொழிற்சாலையில் பணியாற்றும் மாற்றுத் திறன் கொண்ட வீரர்களை தங்க வைப்பதற்கான வசதிகள் இதன் மூலம் ஏற்படுத்தப்படும்.

போரினால் காயமடைந்த மற்றும் உடல் ஊனமுற்ற வீரர்கள் இனிவரும் காலங்களிலும் நாட்டிற்காக தங்களது சேவைகளை வழங்க முன்வந்திருந்த நிலையில் யக்கலையிலுள்ள மேற்படி தொழிற்சாலை புனர்வாழ்வு திட்டத்தின் கீழ் இரு தசாப்தங்களுக்கு முன்னர் நிறுவப்பட்டது.

பிரதி பதவி நிலை பிரதானி குறித்த வளாகத்தில் இருந்த சந்தர்ப்பத்தில் பொறியியல் சேவை படையினருடன் எண்ணங்களை பகிர்ந்து கொண்டதுடன், நிர்மாண பணிகளை விரைவாக நிறைவு செய்வதற்கான அறிவுரைகளையும் வழங்கினார். அத்தோடு தனது வருகையின் நினைவாக மா மரக் கன்று ஒன்றை நாட்டி வைத்த அவர் தொழிற்சாலை வளாகத்துக்குள் காணப்படும் பண்ணை கிராமத்தையும் பார்வையிட்டார்.

யக்கல தொழிற்சாலைக்கான தனது விஜயத்தின் நிறைவில் அனைத்து நிலையினருக்கும் நன்றிகளை தெரிவித்த பிரதி பதவி நிலை பிரதானி , இராணுவ ஆடைத் தொழிற்சாலை கட்டமைப்பின் மாற்றுத்திறன் கொண்ட போர் வீர வீரர்களின் முயற்சி மற்றும் தொழிற்சாலையின் வெற்றிகரமான செயற்பாடுகளுக்கும் பாராட்டு தெரிவித்தார்.

யக்கல மற்றும் அலவ்வவிலுள்ள இராணுவ ஆடைத் தொழிற்சாலை கட்டமைப்பின் அதிகாரிகள், ஏனைய பதவி அணியினர் இந்த நிகழ்வுகளில் கலந்துகொண்டனர்.