02nd June 2020 17:55:13 Hours
மேஜர் ஜெனரல் ரசிக்க பெனார்ன்டோ அவர்கள் புதிய பிரதி பதவி நிலை பிரதானியாக கடமையேற்கும் நிகழ்வு மத அனுஷ்டானங்களுக்கு மத்தியில் 02 ஆம் திகதி காலை ஶ்ரீ ஜயவர்தனபுர இராணுவ தலைமையகத்தில் இடம்பெற்றது.
புதிய பிரதி பதவி நிலை பிரதானி அவர்களின் வருகையின் பின்னர் புத்தருக்கு விளக்கேற்றி பௌத்த தேரர்களின் ஆசிர்வாத்த்துடன் சில உயர் அதிகாரிகளின் பங்கு பற்றலுடன் நிகழ்வு ஆரம்பமானது. மேஜர் ஜெனரல் ரசிக்க பெனார்ன்டோ அவர்கள் மகா சங்கத்தினரின் ஆசீர்வாதங்களுக்கு மத்தியில் உத்தியோகபூர்வ ஆவனத்தில் கையெழுத்திட்டு கடமையை பொறுப்பேற்றார்.
நிகழ்வில் வருகை தந்திருந்த சிரேஷ்ட அதிகாரிகளினால் வாழ்த்துக்கள் தெரிவிக்கப்பட்டன.
கஜபா படையணியின் மேஜர் ஜெனரல் ரசிக பெர்னாண்டோ அவர்கள்இப் பதவிக்கு முன்னதாக கிழக்கு பாதுகாப்பு படைத் தளபதியாக கடமையாற்றினார். அவர் இராணுவத்திலிருந்து ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரல் நிர்மல் தர்மரத்னவிற்கு பதிலாக நியமிக்கப்பட்டார்.
இவர் 06.06.1985 இலங்கை இராணுவ கல்லூரியின் பாடநெறி இல 21 ன் ஊடாக இலங்கை இராணுவ கஜபா படையணியின் 2 ஆவது லெப்டினனாக இணைந்துக் கொண்டார். இவர் இராணுவத்தின் பல உயர் பதவிகளை வகித்துள்ளார்.
இவர், 221 ம் படையின் படைத் தளபதி, தெற்கு பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் பிரிகேடியர் பொது பணி, மேற்கு பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் பிரிகேடியர் பொது பணி, கிழக்கு பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் பிரிகேடியர் பொது பணி, இராணுவ தலைமையகத்தின் காலாட்படை பணிப்பாளர், 68 வது படைப்பிரிவின் தளபதி, பாதுகாப்பு தலைமைப் பிரதானி பொதுப் பணிப்பகத்தின் பணிப்பாளர் நாயகம், மற்றும் கிழக்கு பாதுகாப்புப் படைத் தளபதி ஆகிய பதவிகளை வகித்துள்ளார். மேலும் மேஜர் ஜெனரல் ரசிக பெர்னாண்டோ பிரதி பதவி நிலை பிரதானி பதவிக்கு இணையாக இலங்கை தேசிய பாதுகாப்பு படையணியின் படைத் தளபதியாவும் கடமையாற்றுகின்றார்.
மனிதாபிமான நடவடிக்கைகளின் போது அவரின் திறனுக்காக 'ரண சூர பதக்கம் மற்றும் மேலும் சில பதக்கங்களும் வழங்கப்பட்டுள்ளன.
தனது 34 வருட இராணுவ வாழ்க்கையில் பாகிஸ்தான் கனிஸ்ட அதிகாரிகள் தலைமைத்துவ பாடநெறி, இந்தியா கனிஸ்ட அதிகாரிகள் பாடநெறி, கனிஸ்ட கட்டளை அதிகாரி பாடநெறி - இந்தியா , மற்றும் மேலும் சில உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு கற்கைகளும் கற்றுள்ளார். இவர் பங்களாதேஷ் தேசிய பாதுகாப்பு கல்லூரியில் பட்டம் பெற்றவர். Sports News | Asics Onitsuka Tiger