02nd October 2023 23:30:45 Hours
எதிர்வரும் 74 வது இராணுவ ஆண்டு விழாவிற்கு இணையாக இராணுவ பிரதி பதவி நிலை பிராதனி மேஜர் ஜெனரல் சிடி ரணசிங்க ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ அவர்கள், ராகமவில் உள்ள 'ரணவிரு செவன' நல விடுதிக்கு புதன்கிழமை (செப்டெம்பர் 27) விஜயத்தை மேற்கொண்டதுடன் அங்கு வசிக்கும் போர் வீரர்களுடன் கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டார்.
அவர் ‘ரணவிரு செவன’வில் நிரந்தரமாக மருத்துவ சிகிச்சை பெற்றுவரும் போர் வீரர்களின் நலம் குறித்து கேட்டறிந்த அவர் பரிசுப் பொதிகளையும் வழங்கினார்.
காலாட் பணிப்பகத்தின் பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் கே.பி.எஸ்.ஏ பெர்னாண்டோ, அத்திடியவில் உள்ள ‘மிஹிந்து செத் மெதுர’ நலவிடுதிக்கு சென்று, அதே நாளில் (செப்டெம்பர் 27) அங்கு வசிக்கும் போர் வீரர்களுடன் கலந்துரையாடினார்.
இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ சார்பாக, இரண்டு சிரேஷ்ட அதிகாரிகளும் ராகம மற்றும் அத்திடிய நல விடுதிகளுக்குச் சென்று, ஆண்டு விழா நிகழ்ச்சிகளின் ஒரு பிரிவாக போர்வீரர்களுடன் தேநீர் விருந்துபசாரத்தில் கலந்துகொண்டனர்.
இலங்கை இராணுவ தொண்டர் படையணியின் பிரதி தளபதியான மேஜர் ஜெனரல் எம்.டி.கே.ஆர் சில்வா கே.எஸ்.பீ, நல விடுதிகளின் தளபதிகள், சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் அதிகாரிகளும் இந்நிகழ்வில் பங்குபற்றினர்.