Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

23rd May 2024 17:55:50 Hours

பியுகல் பாடநெறி 72 மற்றும் பெக்பையிப் பாடநெறி 04 நிறைவு

இராணுவ இசைக்குழு மற்றும் நுன்கலை பணிப்பகத்தினால் நடத்தப்பட்ட பியுகல் பாடநெறி 72 மற்றும் பெக்பையிப் பாடநெறி 04, 22 மே 2024 அன்று இராணுவ இசைக்குழு மற்றும் நுன்கலை பாடசாலையில் நிறைவடைந்தது.

இராணுவத்தின் பல்வேறு படையணிகளை பிரதிநிதித்துவப்படுத்தி 33 சிப்பாய்கள் பாடநெறியில் பங்கேற்றனர். இந்நிகழ்வில் பிரதம அதிதியாக இராணுவ இசைக்குழு மற்றும் நுன்கலை பணிப்பகத்தின் பணிப்பாளர் பிரிகேடியர் எஸ்ஜே காரியகரவன ஆர்டப்ளியூபீ ஆர்எஸ்பீ யுஎஸ்பீ அவர்கள் கலந்து கொண்டு பாடநெறியில் பங்குபற்றியவர்களுக்கு சான்றிதழ்களை வழங்கி நிறைவுரையாற்றினார்.

இசைக்குழு மற்றும் நுன்கலை பாடசாலையின் சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் பயிற்றுனர்கள் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.