26th April 2020 20:26:25 Hours
வாழ்வாதாரத்தில் பின் தங்கிய குடும்பத்தைச் சேர்ந்த இரண்டு குடும்பத்தினருக்கு இராணுவத்தினரால் கட்டிட நிர்மான பணிகள் நிறைவு செய்த இரு புதிய வீடுகள் வன்னி பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் ரோஹித தர்மசிறி அவர்களினால் இம் மாதம் (24) ஆம் திகதி கையளிக்கப்பட்டன.
முதலாவது வீடானது தந்திரிமலை எத்டத்கல பிரதேசத்தில் வசிக்கும் திரு கே.டி நந்தசேன அவர்களுக்கும், இரண்டாவது வீடானது தந்திரிமலை மதவாச்சியெலிய பிரதேசத்தில் வசிக்கும் திரு டி.கே தினேஷ் குமார தெல்கஹபில்ல அவர்களுக்கும் கையளிக்கப்பட்டன.
212 ஆவது படைத் தலைமையகத்தின் கட்டளை தளபதி கேர்ணல் அனில் பீரிஸ் அவர்களது பூரன ஏற்பாட்டில் அவுஸ்திரேலியாவை வசிப்பிடமாக கொண்ட நன்கொடையாளியான திரு ஜகத் குணசேகர மற்றும் சாந்த குமாரகமகே அவர்களது நிதி அன்பளிப்புடன் இந்த வீடுகள் நிர்மானிக்கப்பட்டு கையளிக்கப்பட்டன.
212 மற்றும் 21 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் விகும் லியனகே அவர்களது கண்காணிப்பின் கீழ் 5 ஆவது தேசிய பாதுகாப்பு படையணியினரால் இந்த வீட்டு கட்டிட நிர்மான பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
இந்த வீடுகள் சாலைகள், படுக்கை மற்றும் குளியலறைகள், குசினிகளை உள்ளடக்கி முழுமையான வசதிகளை உள்ளடக்கிய சிறந்த வீடாக நிர்மாணிக்கப்பட்டிருந்தன. இந்த வீடுகள் கையளிப்பு நிகழ்விற்கு பிரதம அதிதியாக வன்னி பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் ரோஹித தர்மசிறி அவர்கள் வருகை தந்து இந்த பயணாளிகளுக்கு இந்த வீடுகளை வழங்கி வைத்தார்.
இந்த நிகழ்வில் 21 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் எச்.எல்.வி.எம் லியனகே, 212 ஆவது படைத் தலைமையகத்தின் கட்ளை தளபதி, கட்டளை அதிகாரி போன்றோர் இணைந்து கொண்டனர். jordan release date | Nike Air Max