03rd September 2020 11:30:03 Hours
இன்று காலை (03) ஆம் திகதி அறிக்கையின் படி கொவிட் – 19 தொற்று நோய்க்கு 09 பேர் இலக்காகியுள்ளனர் என்று உறுதி செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் வெளிநாடுகளிலிருந்து இலங்கைக்கு வந்தவர்களாவர். இந்தியாவிலிருந்து வருகை தந்து நுரைச்சோலை மையத்திலிருந்த 4 பேருக்கும், ஐக்கிய அரேபியாவிலிருந்து நுவரேலியா அராலிய க்ரேன்ட் ஹோட்டலிலிருந்த 02 பேருக்கும் , குவைட்டிலிருந்து முல்லைத்தீவு மையத்திலிருந்த 2 பேருக்கும், பூனானை பிரேன்டிக்ஷ் தனிமைப்படுத்தப்பட்ட மையத்திலிருந்த ஒருவரும் கொரோனா தொற்று நோய்க்குள்ளாகியுள்ளதாக கோவிட் – 19 மையம் தெரிவித்தது.
இன்று (02) காலை 6.00 மணியளவில் கந்தகாடு புணர்வாழ்வு மையத்தில் தடுத்து வைக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 639 ஆகும். இவர்கள் 518 பேர் புனர்வாழ்வளிக்கப்படுபவர்கள், 67 பேர் ஊழியர்கள், 5 பேர் விருந்தினர்கள், 48 குடும்ப உறுப்பினர்கள் மற்றும் வெலிக்கடைச் சிறைச்சாலையைச் சேர்ந்த கொரோனா தொற்றுக்குள்ளான ஒருவருடன் நெருங்கிய தொடர்புகளை பேணியவர் என கொவிட் மையம் தெரிவித்துள்ளது.
டோகார் கட்டாரிலிருந்து QR 668 விமானத்தின் மூலம் வருகை தந்து 31 பயணிகளும், இஸ்ரேல் மற்றும் ஜோர்டானிலிருந்து UL 1206 விமானத்தின் மூலம் வருகை தந்த 250 பயணிகளும் வருகை தந்துள்ளனர். அத்துடன் கத்மன்டுவிலிருந்து UL 182 விமானத்தின் மூலம் இன்று மாலை வரவிருக்கும் 26 பேர்கள் முப்படையினரால் நிருவகித்து வரும் தனிமைப்படுத்தல் மையங்களுக்கு அனுப்பி வைக்கப்படுவர். இன்று பிசிஆர் பரிசோதனைகளின் பின்பு தனிமைப்படுத்தல் மையங்களிலிருந்த 443 பேர் தங்களது வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இவர்கள் டொல்பின் ஹோட்டலிலிருந்த 76 பேரும், கல்கிஸ்ஸ ஹோட்டலிலிருந்த 8 பேரும், வெள்ளவத்தை ஜீஎஸ்டி மையத்திலிருந்த 65 பேரும், ஹோல்ட் சேன்ட் ஹோட்டலிருந்த 254 பேரும், ப்ளு வோடர் ஹோட்டலிலிருந்த 40 பேரும் உள்ளடங்குவார்கள்.
இன்றைய அறிக்கையின் பிரகாரம் மொத்தமாக 35,780 நபர்கள் தனிமைப்படுத்தலின் பின்பு வெளியேறியுள்ளனர். அத்துடன் முப்படையினரால் நிருவகித்து வரும் தனிமைப்படுத்தல் மையங்களில் தற்போது 8,239 நபர்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர். நேற்று 2 ஆம் திகதி அறிக்கையின் பிரகாரம் நாடு முழுவதும் 2020 நபர்களுக்கு பிசிஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. இதுவரை நாடு முழுவதும் மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனைகளின் மொத்த எண்ணிக்கை 230,547 ஆகும்.
மேலும் 04 நபர்கள் கொவிட் – 19 கொரோனா தொற்று நோய்க்குள்ளாகியுள்ளதாக இன்று இணங்காணப்பட்டுள்ளனர். இவர்களில் இருவர் வெளிநாடுகளிலிருந்து வந்தவர்கள் என்றும் மற்றவர்கள் கந்தகாடு புணர்வாழ்வு மையத்திலிருந்தவர்களாவார். மேலும் கந்தகாடு புணர்வாழ்வு மையத்திலிருந்து கொரோனா தொற்று நோய்க்கு உள்ளாகியுள்ள 626 நபர்கள் குணமடைந்து வெளியேறியுள்ளனர். மேலும் 13 நபர்கள் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். (நிறைவு) best Running shoes brand | Air Max