Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

08th November 2022 22:24:27 Hours

பிக்குகளுடன் இணைந்து 51 வது படைப்பிரிவின் ஏற்பாட்டில் 'கட்டின சீவர' பூஜை

யாழ். பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் 51 வது படைப்பிரிவினரால் யாழ்.ஸ்ரீ நாக விகாரையின் விகாராதிபதி சாஸ்த்ரபதி வண. மீகஹஜந்துரே சிறிவிமல தேரர் அவர்களின் வேண்டுகோளுக்கிணங்க யாழ் வளாகத்தில் வருடாந்தம் நடத்தப்படும் ‘கட்டின சீவர பூஜை’ ஏற்பாடுகள் மற்றும் நடாத்துவதற்கு ஒத்துழைப்பு வழங்கப்பட்டது.

இந் நிகழ்வானது 51 வது படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் மகேந்திர பெர்னாண்டோ அவர்களின் வழிக்காட்டலுக்கமைய,நவம்பர் 5 முதல் 6 வரை நடைபெற்றது.

யாழ். பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் ஒருங்கிணைப்பில் சில நன்கொடையாளர்களின் நிதி உதவியுடன் வருடாந்த ‘கட்டின பூஜை’ நடைபெறுவது குறிப்பிடதக்கதாகும்.

அதற்கமைய யாழ். பாதுகாப்பு படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் சந்தன விஜயசுந்தர இந்த திட்டத்திற்கு ஆசி வழங்கினார். 512 வது காலாட் படை பிரிகேட்டில் இருந்து கொண்டுவரப்பட்ட கட்டின சீவர மகா சங்கத்தினருக்கு வழங்கப்படுவதற்கு முன்னதாக தர்ம சொற்பொழிவுகளும் சமய நிகழ்வுகளும் இடம்பெற்றன. அதனைத் தொடர்ந்து பிக்குகளுக்கு அன்னதானம் (காலை மற்றும் மதியம்) மற்றும் 'அட்டபிரிகர' வழங்குவதுடன் இப் புன்னிய பூஜை நிறைவுக்கு வந்தது.

சமயப் பிரமுகர்கள், ஆதீனம், யாழ் பாதிரியார் மற்றும் அஸீஸ் மௌலவி, இந்திய தூதரக அதிகாரிகள், அரச அதிகாரிகள், வடமாகாண பிரதம செயலாளர், மேலதிக மாவட்டச் செயலாளர், பணிப்பாளர் - சுகாதார சேவைத் திணைக்களம், 51, 52 மற்றும் 55 வது பிரிகேட் தளபதிகள், வடக்கு முன்னரங்கு பராமரிப்பு பிரதேச தளபதி, 512, 513 மற்றும் 515 வது காலாட்படைப் பிரிகேட்டின் தளபதிகள், இலங்கை கடற்படை, விமானப்படை மற்றும் பொலிஸ் அதிகாரிகள் ஆகியோர் இந் நிகழ்வில் கலந்துகொண்டனர்.