12th April 2021 21:48:22 Hours
யாழ். பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் தளபதி மேஜர் ஜெனரல் பிரியந்த பெரேராவின் ஆலோசனையின் பேரில் நல்லிணக்கம் மற்றும் மனிதாபிமான உதவிகளை ஊக்குவிக்கும் வகையில் யாழ். குடாநாட்டிலுள்ள பார்வை மற்றும் செவிப்புலனற்ற 21 மாற்றுத் திறனாளிகளுக்கு சைகை மொழியை கற்பிப்பதற்கான 6 மாதகால பாடநெறி ஆரம்பித்து வைக்கப்பட்டது.
காங்கேசந்துரை நல்லிணக்க மையம், காது கேளாதோர் மற்றும் பார்வையற்றோருக்கான வடமராச்சி சங்கம் மற்றும் இலங்கை இராணுவத்தின் 'விது' அரசு சார்பற்ற அமைப்பு இணைந்து ஏற்பாடு செய்த இந்த சிறப்பு பாடநெறி சுமார் ஆறு மாதங்களுக்கு காங்கேசன்துறை நல்லிணக்க மையம், சித்தங்கேணி நல்லிணக்க மையம் மற்றும் சில மாதங்களுக்கு முன்பு யாழ்ப்பாண தளபதியின் முயற்சியின் பேரில் நிறுவப்பட்ட கோபாய் நல்லிணக்க மையம் என்பவற்றின் நெருங்கிய ஒத்துழைப்புடன் நடத்தப்பட்டது.
சிவில்-இராணுவ மனிதாபிமான திட்டங்களில் தீவிரமாக முன்னெடுக்கும் காங்கேசந்துறை, சித்தாங்கேணி மற்றும் கோப்பாய் எனும் மூன்று நல்லிணக்க மையங்களில் பார்வை மற்றும் செவித்திறன் குறைபாடுள்ளவர்களுக்கான பயிற்சி வழங்குவதற்கான வெளி வளவாளர்களை ஒழுங்குப்படுத்துவதில் அரச அதிகாரிகள் பெரிதும் ஒத்துழைப்பு வழங்கினர்.
பாடநெறியில் பங்குபற்றிய 21 பேருக்கான சான்றிதழ் வழங்கும் விழா வியாழக்கிழமை (8) 'தல் செவன' விடுமுறை விடுதியில் யாழ்பாண பாதுகாப்புப் படை தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் பிரியந்த பெரேரா தலைமையில் நடைபெற்றது. சிவில் விவகார அதிகாரி உட்பட சில சிரேஸ்ட அதிகாரிகளும் இந்த விருது வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டனர்.