Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

15th May 2020 22:51:20 Hours

பாதுகாப்பு பிரதிநிதி குழுவினர் பொத்துவில் மகா விஹாரைக்கு விஜயம்

வரலாற்று சிறப்புமிக்க தீகவாபிய ரஜ மஹா விகாரையில் கலந்துரையாடலினை மேற்கொண்ட பாதுகாப்பு செயலாளர் மேஜர் ஜெனரல் (ஓய்வு) கமல் குணரத்ன தலைமையிலான உயர் பாதுகாப்பு பிரதிநிதி குழுவினர் வியாழக்கிழமை அருகிலுள்ள மாணிக்கமடு விஹாரைக்கு விஜயத்தினை மேற்கொண்டு அங்குள்ள பிரதான மதகுருவான பௌத்த தேரர் அம்பகஹபிட்டிய சீலரத்தன தேரர் அவர்களை சந்தித்தனர்.

இரக்காமம் பிரதேச செயலாளர் பிரிவில் அமைந்துள்ள வரலாற்று சிறப்புமிக்க மாணிக்கமடு பரிவர ஸ்தூப மேட்டின் தீகவாபிய தாகோபுரத்திற்கு எதிரான சவால்கள் மற்றும் சட்டரீ தியான தாக்கங்கள் தொடர்பாக பௌத்த தேரர் விளக்கினார். கிழக்கில் இந்த பௌத்த வழிபாட்டுத் தளத்தை பாதிக்கும் பிரச்சினைகள் குறித்து இக் குழுவினர்கள் விளக்கத்தினை பெற்றுக் கொண்டனர்.

அன்றைய நிகழ்வின் அடுத்த கட்டமாக இக் குழுவினர் அத்துமீறல் பிரச்சினை மேலும் அழுத்தமாக மாறியுள்ள பொத்துவிலுள்ள பண்டைய முகுது மகா விஹாரைக்கு சென்றனர. இப் புனித இடத்தின் வரலாற்று முக்கியத்துவம் குறித்தும், பண்டைய இடிபாடுகளைக் கொண்ட விஹாரையின் நிலங்கள் எவ்வாறு ஆக்கிரமிப்பாளர்களால் அழிக்கப்பட்டு மற்றும் அபகரிக்கப்பட்டன என்பது தொடர்பாக பிரதிநிதிக் குழுவிற்கு விளக்கமளித்தார்.

இந்த புனித தளத்தின் புதுபிப்பு தொடர்பான பிரச்சினைகள் குறித்து பாதுகாப்புச் செயலாளர் மேஜர் ஜெனரல் (ஓய்வு) கமல் குணரத்ன அவர்கள் பதில் பொலிஸ் மா அதிபர், அம்பாறை மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் மா அதிபர் மற்றும் கடற்படைத் தளபதி ஆகியோரிடம் எதிர்காலத்தில் மேலும் ஆக்கிரமிப்பு இடம்பெறாமல் பூரண ஒத்துழைப்பு வழங்குமாறு அறிவுறுத்தினார்.தொல்பொருள் துறை மற்றும் அதனைச் சார்ந்த நிறுவனங்களுடன் கலந்தாலோசித்து மேலும் விரைவில் ஏற்பாடுகள் செய்யப்படும் என்று பிரதிநிதித்துவ குழுவினர்கள் உறுதியளித்தனர்.

இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா அவர்களுடன் சுருக்கமாக கலந்துரையாடலை மேற்கொண்ட தேரர்களுடன் மட்டகளப்பு ஸ்ரீ மங்களராமய பௌத்த தேரர் அம்பிட்டிய சுமனரத்ன தேரர் அவர்களும் கலந்து கொண்டார். சுற்றுப்பயணத்தின் போது ,இந்த குழுவினர் முகுது மகா விஹாரைக்கு செல்லும் வழியில் மட்டக்களப்பு பிரதேசத்தில் சுனாமியினால் பாதிக்கட்டப்பட்ட பின்னர் அறைவாசி நிரமாணப்பணிகள் முடிவடைந்த நிலையிலுள்ள ஒரு வீட்டுத் திட்டதையும் பார்வையிட்டனர்.

வரலாற்று சிறப்புமிக்க முகுது மகா விஹாரையானது ரோஹன இராச்சியத்தின் மன்னர் கவன் திஸ்ஸவின் ராணியான களனி திஸ்ஸவின் மகள் விஹார மஹா தேவி தரையிறங்கிய இடத்தைக் குறிக்கிறது. கி.மு. இரண்டாம் நூற்றாண்டில் இயற்கை பேரழிவு காரணமாக களனி கடலில் மூழ்கிய பின்னர் களனி திஸ்ஸ மன்னரின் மகளான தேவி தெய்வங்களை திருப்திப்படுத்துவதற்காக ஒரு தங்க கப்பலில் கடலுக்குள் தள்ளப்பட்டு பின்னர் பொத்துவிலில் உள்ள முகுது மகா விஹாரையின் அருகின் கரைக்கு வந்ததாக பழங்கால வரலாற்றில் ராஜவல்லியவில் கூறப்படுகின்றது. பின்னர், விஹாரமஹா தேவி என்ற பெயரில் ருஹுனு இராச்சியத்தின் மன்னர் கவன் திஸ்ஸவின் முக்கிய மனைவியானார். best Running shoes brand | UK Trainer News & Releases