Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்கள்

logo logo logo

05th October 2019 12:14:14 Hours

பாதுகாப்பு பல்கலைக்கழக உபவேந்தர் இராணுவ தளபதியை சந்திப்பு

கொதலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் உபவேந்தரான எயார் வைஷ் மார்ஷல் H.M.S.K.B கொடகதெனிய அவர்கள் இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா அவர்களை இம் மாதம் (4) ஆம் திகதி இராணுவ தலைமையகத்தில் சந்தித்தார்.

இச்சந்திப்பின் போது பொது விடயங்கள் மற்றும் பயிற்சிகள் தொடர்பான விடயங்களை கலந்துரையாடினார்கள். பின்பு உபவேந்தர் அவர்களினால் புதிதாய் பதவியேற்ற இராணுவ தளபதிக்கு வாழ்த்துக்களையும் தெரிவித்தார்.

இறுதியில் இவர்களது சந்திப்பை நினைவு படுத்தும் முகமாக இருவரும் நினைவுச் சின்னங்களை பரிமாறிக் கொண்டனர்.