Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

01st April 2020 18:29:11 Hours

பாதுகாப்பு படைத் தலைமையகங்களின் ஏற்பாட்டில் மாதாந்த ஓய்வூதியம் பெறுபவருக்கு உதவிகள்

நாடாளவியல் ரீதியாக உள்ள பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் ஏற்பாட்டில் மாதாந்த ஓய்வூதியம் பெரும் நபர்களுக்கு இராணுவ போக்குவரத்து வசதிகளை வழங்கி வைத்து இன்றைய தினம் (2) ஆம் அவர்களது ஓய்வூதியங்களை பெறுவதற்கான வசதிகள் வழங்கி வைக்கப்பட்டன.

பாதுகாப்பு தலைமை பிரதானியும், இராணுவ தளபதியுமான லெப்டின ன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா அவர்களது பரிந்தரைப்பின் கீழ் இந்த பணிகள் இராணுவத்தினரால் நாடாளவியல் ரீதியாக இன்றைய தினம் மேற்கொள்ளப்பட்டன.

யாழ், வன்னி, கிழக்கு, கிளிநொச்சி, முல்லைத்தீவு, மத்திய மற்றும் மேற்கு பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் படைத் தளபதிகளின் தலைமையில் இன்றைய தினம் இந்த பணிகள் இப்பிரதேசங்களில் மேற்கொள்ளப்பட்டதுடன் நாளைய தினம் (3) ஆம் திகதியும் இந்த ஓய்வூதிய பணிகள் மேற்கொள்ளப்படும் என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும். Sports brands | Saucony Lanzar JAV 2 - Unisex , Worldarchitecturefestival