05th April 2025 11:02:34 Hours
பாதுகாப்பு சேவைகள் டென்னிஸ் போட்டி – 2025ல் பரிசு வழங்கும் விழா 2025 ஏப்ரல் 04 அன்று நாரஹேன்பிட்டி இராணுவ டென்னிஸ் மைதானத்தில் நடைபெற்றது. இலங்கை இராணுவ டென்னிஸ் குழுவினால் முப்படையினரை பிரதிநிதித்துவப்படுத்தும் வீரர்களின் பங்குபற்றுதலுடன் போட்டிகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
பரிசளிப்பு நிகழ்வில் பிரதம அதிதியாக இராணுவ பதவி நிலை பிரதானி மேஜர் ஜெனரல் எம்.ஜீ.டபிள்யூ.டபிள்யூ.டபிள்யூ.எம்.சீ.பி விக்ரமசிங்க ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ பீஎஸ்சீ அவர்கள் கலந்து கொண்டார். இலங்கை இராணுவ டென்னிஸ் குழுவின் தலைவர் மேஜர் ஜெனரல் டி.சி.எம்.ஜீ.எஸ்.டீ. குரே ஆர்டப்ளியூபீ ஆர்எஸ்பீ யூஎஸ்பீ என்டிசீ பீஎஸ்சி அவர்களின் மேற்பார்வையின் கீழ் இந்நிகழ்வு நடத்தப்பட்டது.
வருகை தந்த பிரதம அதிதியை இலங்கை இராணுவ டென்னிஸ் குழுவின் தலைவர் வரவேற்றார்.
பரிசளிப்பு விழாவிற்கு முன்னதாக, இலங்கை இராணுவம் மற்றும் இலங்கை கடற்படையின் அணிகளுக்கிடையில் இரு படைகளின் வீரர்களின் திறமைகள் மற்றும் விளையாட்டுத்திறனை வெளிப்படுத்தும் கண்காட்சி போட்டி நடைபெற்றது.
நிகழ்வின் போது, 2025 மார்ச் மாதம் 25 ஆம் திகதி முதல் 28 ஆம் திகதி வரை முப்படையினரை பிரதிநிதித்துவப்படுத்தும் 56 போட்டியாளர்கள் 07 பிரிவுகளில் போட்டியிட்டனர். ஒட்டுமொத்த சாம்பியன்ஷிப்பை இலங்கை கடற்படை வென்றதுடன் இலங்கை விமானப்படை இந்த நிகழ்வில் இரண்டாம் இடத்தைப் பிடித்தது.