Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

09th November 2023 20:45:55 Hours

பாதுகாப்பு சேவைகள் கட்டளை மற்றும் பதவிதாரிகள் கல்லூரியின் வெளிநாட்டு மாணவ அதிகாரிகள் முல்லைத்தீவிற்கு விஜயம்

சபுகஸ்கந்த பாதுகாப்பு சேவைகள் கட்டளை மற்றும் பதவிதாரிகள் கல்லூரியில் பயிற்சி பெற்று வரும் 10 வெளிநாட்டு மாணவ அதிகாரிகள் தமது பயணத்தின் போது அவர்களது குடும்ப உறுப்பினர்களுடன் செவ்வாய்க்கிழமை (நவம்பர் 7) முல்லைத்தீவுக்கு விஜயத்தை மேற்கொண்டனர்.

முதலில், அவர்கள் முல்லைத்தீவு போர்வீரர் நினைவுத்தூபியை பார்வையிட்டு மரியாதை செலுத்தியதுடன், 68 வது காலாட் படைப்பிரிவு மற்றும் முல்லைத்தீவு நகர முக்கிய இடங்களையும் பார்வையிட்டனர்.

முல்லைத்தீவு பாதுகாப்பு படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் எம்.கே ஜயவர்தன ஆர்எஸ்பீ யூஎஸ்பீ என்டியூ அவர்களின் சார்பாக 68 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் எஸ் கஸ்தூரிமுதலி ஆர்எஸ்பீ என்டியூ பீஎஸ்சி அவர்கள் வருகை தந்த குழுவை மரியாதையுடன் வரவேற்றார்.

இக்குழுவினர் பிரதேசத்தை பார்வையிடுவதற்கு முன்பு பாராட்டுக்குரிய நினைவுச்சின்னங்களை பரிமாற்றிக்கொண்டனர்.

இந் நிகழ்ச்சியில் 68 வது காலாட் படைப்பிரிவின் சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் கலந்துகொண்டதுடன், இந்தியா, பங்களாதேஷ், பாகிஸ்தான், நேபாளம் போன்ற நாடுகளின் பிரதிநிதியாக மாணவ அதிகாரிகள் கலந்து கொண்டனர்.