Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

18th October 2021 17:28:08 Hours

பாதுகாப்பு செயலாளர் ‘தீகவாபிய’ மறுசீரமைப்பின் முன்னேற்றத்தை பார்வையிட்டார்

பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் கமால் குணரத்ன (ஓய்வு) மற்றும் புத்தசாசனம், மத மற்றும் கலாச்சார விவகாரங்கள் அமைச்சின் செயலாளர், 24 வது காலாட்படைப் பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் சமிந்த லாமஹேவ,சிவில் பாதுகாப்பு துறை பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் ரஞ்சன் லாமஹேவா (ஓய்வு), இராணுவ தொடர்பு அதிகாரி மேஜர் ஜெனரல் தினேஷ் நாணயக்கார,அம்பாறை பொலிஸ் மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபர் திரு செனவிரத்ன, தொல்லியல் துறை பணிப்பாளர் நாயகம் பேராசிரியர் அனுர மானதுங்க, பௌத்த கலாச்சார ஊடக தலைவர் வென் பொரலாண்டே வஜிரக்னன தேரர் மற்றும் கடற்படை , விமானப்படை மற்றும் பொலிஸ் சிரஷ்ட அதிகாரிகள் உட்ளிட்ட குழுவினர்கள் வெள்ளிக்கிழமை (15)ம் திகதி வரலாற்று சிறப்பு மிக்க 'தீகவாபிய மறுசீரமைப்பு திட்டத்தினை மேற் பார்வையிட்டனர்.

அங்கு வருகை தந்த குழுவினர் மறுசீரமைப்பு திட்டத்தை மதிப்பாய்வு செய்து, அதன் தற்போதைய மறுசீரமைப்புப் பணிகள் தொடர்பான விடயங்களைப் பற்றி கலந்துரையாடி , இத்திட்டத்தை விரைவுபடுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் தொர்பாகவும் ஆராய்ந்தனர்.