Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

16th May 2020 23:58:01 Hours

பாதுகாப்பு செயலாளர் மற்றும் உயர் பாதுகாப்பு பிரதிநிதி குழுவினர் தீகவாபிய மற்றும் முகுது மகா விஹாரைக்கு விஜயம்

கிழக்கு மாகாணத்தில் இடம் பெற்றுவரும் தொல்பொருள் மதிப்புள்ள நிலங்களில் அத்துமீறல் குற்றச்சாட்டுகள், பொது மக்களின் தொடர்ச்சியான பிரச்சினைகள் ஆகியவற்றினை கருத்திற்கொண்டு, கிழக்கு மாகாண ஆளுநர் செல்வி அனுராதா யஹம்பத், பாதுகாப்பு செயலாளர் மேஜர் ஜெனரல் (ஓய்வு) கமல் குணரத்ன, பாதுகாப்பு தலைமைப் பிரதானியும் இராணுவத் தளபதியுமான லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா, கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பியல் டி சில்வா, உதவி பொலிஸ் மா அதிபர் சி.டி விக்ரமரத்ன, தேசிய புலனாய்வு துறை தலைவர், கிழக்கு பாதுகாப்பு படைத் தளபதி, இராணுவ லைசன்ஸ் அதிகாரி, அம்பாறை மாவட்ட சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர், அம்பாறை மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபர், அம்பாறை மாவட்ட செயலாளர், பிரதேச செயலாளர்கள் மற்றும் சிலர், அரச அதிகாரிகள் ஆகியோரின் தலைமையிலான உயர் பிரதிநிதி குழுவினர்கள், அங்குள்ள நிலைமைகளை ஆராய்ந்து அதனை தீர்ப்பதற்கான சாத்தியங்களை இனங்காண்பதற்காக இன்று காலை 14 ஆம் திகதி தீகவாபிய மற்றும் பொத்துவில் பிரதேசத்திற்கான விஜயத்தினை மேற்கொண்டனர்.

பிரதிநிதிக் குழுவிர் பண்டைய தீகவாபிய தலைமை மதகுருவான பௌத்த தேரர் மஹோய சோபித தேரரை முதலில் சந்தித்து விஹாரைக்கு சொந்தமான சொத்துக்கள் மற்றும் தொல்பொருள் முக்கியத்துவத்தின் இடிபாடுகளின் பாதுகாப்பின் அடிப்படையில் பிற பிரச்சினைகளை மையமாகக் கொண்டு விஹாரை சம்பந்தப்பட்ட விஷயங்களைப் பற்றி கலந்துரையாடினர். அவர்கள் அனைவரும் விஹாரையிலுள்ள புனித இடத்திற்கும் மற்றும் மகா சங்க உறுப்பினர்களுக்கும் மரியாதை செலுத்தினர். அவர்கள் மத நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு மற்றும் புனித இடத்திற்கு மரியாதை செலுத்தினர்.

புத்தரால் புனிதப்படுத்தப்பட்ட புனித ஆறாவது வரலாற்றுத் தளமான சோலோஸ்மஸ்தனாயாவில் (இந்த பதினாறு வழிபாட்டுத் தலங்கள்) இடம் பெற்ற கூட்டத்தின் போது, அம்பாறையில் உள்ள பௌத்த தேரர் ஹெத்கொட இந்திரசார மகா விஹாரை மற்றும் பிரிவெனவின் தலைமைத் தலைவரான பௌத்த தேரர் கிரிந்தவல சோமரத்ன நாயக தேரர் கலந்து கொண்டார்.

புத்தர், 500 அரஹான்களுடன் இந்த இடத்திற்கு விஜயம் செய்ததாகவும், வரலாற்றுக் கதையான ‘மகாவம்சம்’ படி, தற்போதைய தீகவாபிய தாகோபவானது சதாதிஸ்ஸ அரசனால் (கிமு 137-119) கட்டப்பட்டதாகவும் வரலாற்றுச் சான்றிதல் கூறுகின்றது.. அனுராதபுரம் மற்றும் பொலன்னறுவை இராஜ்யங்களின் வீழ்ச்சியுடன், புனிதமான இடம் அடர்ந்த காடுகளால் சூழப்பட்டது. தீகவாபிய தாகோபவின் சமீபத்திய வரலாறு மற்றும் மறுமலர்ச்சி 1916 ஆம் ஆண்டில் வென் கொஹுகும்புரே ரேவத தேரர் வந்து விஹாரைக்குச் சொந்தமான நிலத்தை மீட்டெடுத்து பக்தர்களை ஈர்க்கத் தொடங்கினார். 1950 ஆம் ஆண்டில், பௌத்த எதிர்ப்பு கூட்டத்தினர் தேரரைக் கொன்றனர். Sports Shoes | GOLF NIKE SHOES