09th October 2023 21:54:46 Hours
பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் கௌரவ பிரேமித பண்டார தென்னகோன், கௌரவ சபாநாயகர் மற்றும் சில பாராளுமன்ற உறுப்பினர்களுடன் ஞாயிற்றுக்கிழமை (ஒக்டோபர் 08) மாத்தறையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு மேற்கொண்ட விஜயத்தின் போது பாதிக்கப்பட்ட பொதுமக்களைச் சந்தித்ததுடன், இராணுவத்தின் நிவாரணப் பணிகளையும் பாராட்டினர்.
மாத்தறை 3 வது கெமுனு ஹேவா படையணிக்கு வருகைதந்த 61 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் ஆர்.ஏ.ஜே.என் ரணசிங்க ஆர்எஸ்பீ யூஎஸ்பீ என்டிசீ அவர்கள் பிரதேசத்தில் ஏற்பட்ட வெள்ளம் தொடர்பான தற்போதைய நிலைமை குறித்து விளக்கமளித்ததுடன், பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் மாத்தறை மாவட்ட செயலாளரை சந்தித்து மேலதிக விபரங்களையும் கேட்டு அறிந்து கொண்டார்.
மாத்தறை மத்திய கல்லூரியில் தற்காலிகமாக தங்கியுள்ள இடம்பெயர்ந்தவர்களிடம் நலம் விசாரித்த பின்னர் மாலிம்படை பிரதேச செயலக வளாகத்தில் இராணுவத்தினரால் பராமரிக்கப்பட்டு வரும் தற்காலிக சமையல் கூடத்திற்கு விஜயம் செய்தார்.
மேலும், இராணுவத்தினரால் பலப்படுத்தப்பட்டுள்ள அத்துடாவ அணைப் பகுதியை பார்வையிட்ட அவர், படையினரின் கடின உழைப்பை வெகுவாகப் பாராட்டினார்.