Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

20th April 2021 16:30:28 Hours

பாதுகாப்பு அமைச்சு தேநீர் விருந்துபசாரத்துடன் புத்தாண்டு பணிகளை ஆரம்பிக்கிறது

புத்தாண்டு பிறப்பை முன்னிட்டு பாதுகாப்பு அமைச்சுன் ஊழியர்களுக்கான விருந்துபசாரம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததுடன், ,பால்சோறு ,இனிப்பு வகைகள் உள்ளடங்களாக விருந்துபசார மேசை தயார் செய்யப்பட்டிருந்தது. திங்கட்கிழமை (19) பாதுகாப்பு அமைச்சின் வளாகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த குறித்த நிகழ்வில் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஜெனரல் (ஓய்வு) கமல் குணரத்ன கலந்துக்கொண்டார்.

பாதுகாப்பு அமைச்சின் சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி சித்ராணி குணரத்ன, பாதுகாப்பு பதவி நிலை பிரதானியும் இராணுவ தளபதியுமான ஜெனரல் ஷவேந்திர சில்வா, கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகாதென்னே, விமானப்படைத் தளபதி ஏயார் மார்ஷல் பிரசன்ன பாயோ, மேலதிக மற்றும் உதவி செயலாளர்கள் சிரேஸ்ட இராணுவ அதிகாரிகள், அரச அதிகாரிகள் மற்றும் பாதுகாப்பு அமைச்சின் சிற்றூழியர்கள் ஆகியோரும் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்ச்சியில் சில கருத்துக்களைத் தெரிவித்த பாதுகாப்புச் செயலாளர் ஜெனரல் (ஓய்வு) கமல் குணரத்ன அனைவரும் திறமையாகச் செயற்பட வேண்டும் எனவும், ஜனாதிபதியின் சுபீட்சத்தின் நோக்கிற்கு அமைவாக அரசாங்கத்தின் அபிவிருத்திச் செயற்பாடுகளுக்கு சிறந்த ஒத்துழைப்பை வழங்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.

அவர் மேலும் கூறுகையில், ஜனாதிபதியின் வழிகாட்டலின் கீழ் நாட்டிற்குள் கொவிட் - 19 பரவலை தடுப்பதற்காக முப்படையினர் இணைந்து முன்னெடுத்த செயற்பாடுகள் வெற்றியளித்துள்ளதாகவும் அதற்கு சகலரும் நன்றியுள்ளவர்களாக இருக்க வேண்டியது அவசியமெனவும் தெரிவித்தார்.

ஜெனரல் (ஓய்வு), கமல் குணரத்ன ரணவிரு குடும்பங்களைப் பற்றி தெரிவிக்கையில், போர் வீரர்களின் குடும்பங்களை சார்ந்தவர்களுக்கு வாழ்நாள் சம்பளம் மற்றும் கொடுப்பனவுகளை வழங்குவதற்கான நடவடிக்கைகள் ஜனாதிபதியின் பணிப்பின் பேரில் ஆரம்பிக்க உள்ளதாகவும் தெரிவித்தார்.