10th June 2021 14:08:04 Hours
சில நாட்களுக்கு முன்னர் ‘Xpress Pearl’ கப்பல் தீ பற்றலினால் வெலிகம - வள்ளிவல கரையோர பகுதியில் ஏற்பட்ட அசுத்தமான கழிவுகளானது, மேற்கு பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் கீழ் உள்ள 61 வது படைப் பிரிவின் 613 வது பிரிகேடடின் கீழ் உள்ள 3 கெமுனு ஹேவா படையணியின் படையினரால் துப்புரவு செய்யப்பட்டன.
இப் பணிகள் பாதுகாப்பு பதவி நிலை பிரதானியும் இராணுவத் தளபதியுமான ஜெனரல் ஷவேந்திர சில்வா அவர்களின் அறிவுறுத்தலுக்கமைவாக மேற்கு பாதுகாப்பு படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் விக்கும் லியனகே அவர்களின் வழிக்காட்டலின் கீழ் மேற் முன்னெடுக்கப்பட்டன.
இத் திட்டத்தினை 61 வது படைப் பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் தம்மி ஹெவகே, 613 வது பிரிகேட் தளபதி பிரிகேடியர் உபுல் கொடித்துவக்கு ஆகியோர் மேற்பார்வை செய்தனர்.