Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

01st November 2021 17:45:02 Hours

பாடசாலைகள் மீள திறக்கப்படவுள்ளதையிட்டு 65 வது படைப்பிரிவு சிப்பாய்களால் தூய்மையாக்கல் பணிகள் முன்னெடுப்பு

கொவிட்-19 தொற்றுநோய் அச்சுறுத்தல் காரணமாக 10 மாதங்களுக்கும் மேலாக பாடசாலைகள் மூடப்பட்டிருந்த நிலையில் அவற்றை மீளத்திறப்பதற்கு முன்பாக வெள்ளங்குளம் மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் அமைந்துள்ள பாடசாலைகளில் தூய்மையாக்கல் பணிகளை முன்னெடுப்பதற்காக பாடசாலைகளின் அதிபர்கள் 65 வது படைப்பிரிவினரின் உதவியை கோரியிருந்தனர்.

அதன்படி, 65 வது படைப் பிரிவு தளபதி மேஜர் ஜெனரல் அனில் சமரசிறி அவர்களின் வழிகாட்டலின் கீழ், 651 மற்றும் 652 வது பிரிகேடுகளின் 10 வது இலங்கை இலேசாயுத காலாட் படை, 19 வது இலங்கை இலேசாயுத காலாட் படை, 17 வது (தொ) இலங்கை இலேசாயுத காலாட்படை சிப்பாய்களால் பாடசாலை கட்டிடங்களை அண்மித்த வளாகங்களை தூய்மையாக்குவதற்கான சிரமான பணிகள் ஒக்டோபர் 27-28 திகதிகளில் முன்னெடுக்கப்பட்டதோடு பெற்றோர்களும் பங்களிப்பை வழங்கியிருந்தனர்.

இத்திட்டத்தின் போது வெள்ளாங்குளம் அரசினர் தமிழ்க் கலவன் பாடசாலை, பாலிநகர் குமாரசுவாமி ஆரம்ப பாடசாலை, நட்டான்கண்டல் ஆரம்ப பாடசாலை, ஆலங்குளம் ஆரம்ப பாடசாலை, தேரங்கண்டல் அரசினர் தமிழ்க் கலவன் பாடசாலை, அம்பாள்புரம் ஆரம்ப பாடசாலை, கொல்லவில்லாங்குளம் ஆரம்ப பாடசாலை, பாலிநகர் தமிழ் அழகன் கல்லூரியின் ஆரம்ப பிரிவு உள்ளிட்ட சில பாடசாலைகளையும் ஆரம்ப பிரிவுகளையும் தூய்மையாக்கும் பணிகள் முன்னெடுக்கப்பட்டன.

மேற்படி பகுதிகளில் தடுப்பூசி வழங்கும் செயற்பாடுகள் வெற்றிகரமான நிறைவு செய்யப்பட்டுள்ளமையால் பாடசாலைகளை மீள ஆரம்பிக்க முடிந்துள்ளதோடு, சிப்பாய்கள் பாடசாலை வளாகங்களில் தொற்றுநீக்கம் செய்து பாடசாலை மீளத்திறப்பதற்கு அதிகாரிகளுக்கு உதவிகளை வழங்கினர்.

சிரமதானத்தின் பின்னர், உதவிகளை வழங்கியமைக்காக இராணுவத் தளபதி மற்றும் இராணுவத்தின் அனைத்து சிப்பாய்களுக்கும் பாடசாலைகளின் ஆசிரியர்கள் மற்றும் பிள்ளைகள் சார்பாக அதிபர்கள் நன்றிகளை தெரிவித்தனர்.