Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

01st April 2021 12:39:15 Hours

பாகிஸ்தான் தேசிய வானொலி தொடர்பாடல் கூட்டுத்தாபனத்தின் பிரதம நிறவேற்று அதிகாரி ஜெனரல் ஷவேந்திர சில்வாவுக்கு அழைப்பு

பாகிஸ்தான் தொலைத்தொடர்பு சாதனங்களின் முன்னோடி மற்றும் தகவல் தொடர்புத் துறை மற்றும் பாகிஸ்தானில் தொலைத்தொடர்பு உபகரண தயாரிப்பதில் முன்னோடியுமான பாக்கிஸ்தானின் தேசிய வானொலி தொலைத்தொடர்பு கூட்டுதாபனம் சில நாட்களுக்கு முன்பு பாதுகாப்பு பதவி நிலை பிரதானியும் இராணுவ தளபதியுமான ஜெனரல் ஷவேந்திர சில்வா அவர்களுக்கு வரவேற்பளித்தது.

பாக்கிஸ்தானின் தேசிய வானொலி தொலைத்தொடர்பு கூட்டுதாபன பிரதம நிறைவேற்று அதிகாரி பிரிகேடியர் தௌபீக் அஹமதுவின் அழைப்பின் பேரில் அங்கு அவர் விஜயத்தை மேற்கொண்டுள்ளார்.

இதன் போது இலங்கை தூதுக்குழுவினர் தங்களை அறிமுகப்படுத்திக்கொண்டதன் பின்னர், வணிகத் தேவைகளை பூர்த்திச் செய்யும் கூட்டுத்தாபன வளாகத்தை சுற்றிப்பார்க்க அழைத்துச் செல்லப்பட்டதுடன் ஜெனரல் ஷவேந்திர சில்வா குழு புகைப்படம் எடுக்கும் நிகழ்வில் கலந்துகொண்டதுடன் விருந்தினர் பதிவேட்டில் எண்ணப்பகிர்வுகளை பதிவிட்டார். அதனையடுத்து இரு நாடுகளுக்கும் இடையிலான நட்புறவை அடையாளப்படுத்திக்கொள்ளும் வகையில் நினைவுச் சின்னங்களும் பரிமாறிக்கொள்ளப்பட்டன.

கடந்த மூன்று தசாப்தங்களாக தேசிய வானொலி தொடர்பாடல் கூட்டுத்தாபனமானது பாகிஸ்தான் தொலைத்தொடர்பு கூட்டுத்தாபனம், பாதுகாப்பு சேவைகள், மற்றும் பிற நிறுவனங்களுக்கான பல உயர்தர தயாரிப்புகளை 1965-66 முதல் உற்பத்தி செய்து வருகின்றமை குறிப்பித்தக்கதாகும்.

மேலும் இந்த விஜயத்தில் இராணுவ நிறைவேற்று பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் சஞ்சய வனசிங்க, இராணுவ சேவா வனிதா பிரிவின் தலைவி திருமதி சுஜீவா நெல்சன் மற்றும் ஏனைய பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர். Sport media | Mens Flynit Trainers