Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

17th February 2022 06:23:45 Hours

பழங்குடியின சமூகத்திற்கான புதிய 'ஆதிவாசி ஜன உறும மகா சேயா' திறந்து வைப்பு

தம்பானையில் உள்ள பூர்வீகபழங்குடி சமூகத்தின் தலைவர் விஸ்வ கீர்த்தி வனஸ்பதி உருவாரிகே வன்னில எத்தோ அவர்களால் நெல்லிகல சர்வதேச பௌத்த நிலையம் மற்றும் புதிதாக புனரமைக்கப்பட்ட குரகல விகாரையின் தலைமை விகாராதிபதி வண.வடுரகும்புரே தம்மரதன தேரர் அவர்களிடம் விடுக்கப்பட்ட வேண்டுகோளுக்கு இணங்க நிர்மாணிக்ப்பட்ட 'ஷாக்ய புத்திர சீவலி மகா சேயா' (பகோட) 'ஆதிவாசி ஜன உறும மகா சேயா' ,நவம் பௌர்ணமி தினமான புதன்கிழமை (16) காலை குருகும்புரவில் 'தஹம் சபை' வைபவத்தின் போது சமூகத்திடம் கையளிக்கப்பட்டது.

வண.வடுரகும்புரே தம்மரதன தேரர் மற்றும் நன்கொடையாளரான கொழும்பில் உள்ள வரையறுக்கப்பட்ட மாஸ்டர் கைட் பப்ளிகேஷன்ஸ் தனியார் நிறுவன உரிமையாளர்களான திருமதி டிஸ்னா வணிகசேகர மற்றும் திரு சந்திரசேன விக்கிரமரத்ன ஆகியோரின் அழைப்பின் பேரில் அஸ்கிரிய பீடத்தின் தலைவரான வரகாகொட ஞானரதனாபிதான மகா நாயக்க தேரர், பிரதம அதிதியான பாதுகாப்பு பதவி நிலை பிரதானியும் மற்றும் இராணுவத் தளபதியுமான ஜெனரல் ஷவேந்திர சில்வா அவர்களுடன் இணைந்து இந்த நிகழ்வில் கலந்துகொண்டு மலர் நாடாவை வெட்டி, புதிய புனித மேல் சிகரத்தை திறந்து வைத்தார். பகோடவில் (டகோபா) ஹெலிகாப்டர் மலர் இதழ்களை தூவி, அப்பகுதியில் உள்ள ஆதிவாசி தலைவர் மற்றும் ஆதிவாசி சமூகத்தினரின் பங்குபற்றுதலுடன் மகா சங்கத்தினரின் ஆசீர்வாதங்களுக்கு மத்தியில் அதன் சம்பிரதாய திறப்பு விழா ஆரம்பிக்கப்பட்டது.

திறப்பு விழாவின் பின்னர், புதிய பாகோட மற்றும் புத்தருக்கு முதல் மலர் காணிக்கைகளை மகா சங்க உறுப்பினர்களுடன் இணைந்து ஜெனரல் ஷவேந்திர சில்வா அவர்கள் வழங்கினார். ஒரு சிறிய அனுஷ்டானத்திற்க்குப் பிறகு, மகா சங்கத்தினருக்கு அன்னதானம் மற்றும் 'பிரிகர' வழங்கப்பட்டது. அதேநிகழ்வில் இலங்கையின் பழங்குடியின சமூகத்தின் பரிணாம வளர்ச்சி குறித்து அவர்களின் கடந்த காலத்தையும் நிகழ்காலத்தையும் மேற்கோள் காட்டி நூலை எழுதிய சிறுமியொருவர் அதன் பிரதியொன்றை அன்றைய பிரதம அதிதியான ஜெனரல் சவேந்திர சில்வாவிற்கு வழங்கினார். ஆதிவாசி சமூகத்தினை சேர்ந்தவர்கள், விழாவில் கலந்துகொண்ட பக்தர்கள் மற்றும் பார்வையாளர்களும் அன்றைய பிரதம விருந்தினருடன் உரையாடி சில கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டனர்.

மிகச் சிறந்த சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி, மல்வத்தை பிரிவின் அனுநாயக்க தேரர் வண. திவுல்கும்புரே விமலதம்ம , மஹியங்கனை ரஜமஹா விஹாரையின் அதிபதியான வண. உருளேவத்தே தம்மாதஸ்ஸி நாயக்க தேரர் மற்றும் பௌத்த பிக்குகள் பலர் கலந்துகொண்டனர். இவ் விகாரையின் கட்டுமானப் பணிகள் நிறைவடைந்திருந்தாலும் கொவிட் 19 தொற்றுநோய் காரணமாக முறையான திறப்பு விழா சில மாதங்களுக்கு முன்பு காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டது.