Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

பளு தூக்கள் போட்டிகளில் இராணுவ வீரர்கள் சாதனை

பொலன்னறுவையில் (28) வியாழக்கிழமை நடைபெற்ற தேசிய பளுதூக்கள் சம்பியன்ஷிப் போட்டியில் பங்குபற்றிய இராணுவ வீரர்கள் வெற்றிகளை பதிவு செய்தனர்.

இதன்போது 6 வது இராணுவ பொதுச் சேவைப் படையணியின் லான்ஸ் கோப்ரல் வை.டி.ஐ குமார 55 கிலோ எடை வகுப்பை பிரதிநிதித்துவப்படுத்தி ஸ்னேஜ் முறையில் 111 கிலோ எடைகளையும் , கிலின்ஜ் மற்றும் ஜேர்க் முறையில் 140 கிலோ எடைகளை தூக்கி மொத்தமாக 251 கிலோ எடையை தூக்கி இலங்கைக்குள் 3 புதிய சாதனைகளையும் பதிவு செய்தார்.

அதேநேரம் கொமாண்டோ படையணியின் சார்ஜன்ட் ஜே.ஏ.சி.லக்மால் 61 கிலோ எடை வகுப்பை பிரதிநிதித்துவப்படுத்தி களமிறங்கியதுடன், ஸ்னேஜ் முறையில் 112 கிலோ, கிளிஞ்ச் முறையில் 140 கிலோ மற்றும் மொத்தமாக 262 கிலோ எடையை தூக்கி வெற்றியை பதிவு செய்திருந்தார்.

இலங்கை பீரங்கி படையை சேர்ந்த சார்ஜன் ஏ.ஜி.எஸ்.அபயவிக்கிரம 102 கிலோ எடை வகுப்பை பிரதிநிதித்துவப்படுத்தி, ஸ்னேஜ் முறையில் 130 கிலோ, கிளிஞ்ச் மற்றும் ஜேர்க் முறையில் 165 கிலோ என மொத்தமாக 295 கிலோ எடையை தூக்கி வெற்றியை பதிவு செய்தார். Sneakers Store | Nike