07th January 2020 22:08:16 Hours
இனாமலுவையிலுள்ள 53 ஆவது படைப் பிரிவின் ஏற்பாட்டில் இம் மாதம் (4) ஆம் திகதி சமூக நலன்புரி உதவித் திட்டத்தின் கீழ் கர்ப்பினித் தாய்மார்கள், அங்கவீனமுற்ற நபர்கள், பாடசாலை மாணவர்களுக்கு பலுகஸ்வெவையில் அமைந்துள்ள ஆலோக விகாரையில் வைத்து நன்கொடை பொதிகள் வழங்கி வைக்கப்பட்டன.
கொழும்பு தேசிய சுற்றுலா வழிகாட்டி மற்றும் லயன்ஸ் கழகத்தின் பூரன அனுசரனையில் 100 சத்துணவு பொதிகள், 1500 மூக்கு கண்ணாடிகள், 10 சக்கர நாட்காலிகள் பாடசாலை உபகரண பொதிகள் நன்கொடையாக வழங்கி வைக்கப்பட்டன.
இந்த பகுதியில் சிறுநீரக நோய்கள், நீரிழிவு நோய், பல் சிதைவு நோய்கள் தொடர்பாக நடமாடும் வைத்திய கிளினிக் சேவைகளும் இடம்பெற்றன. அத்துடன் அனுராதபுரத்தில் உள்ள இரத்த வங்கி பிரிவின் உதவியுடன் நோயாளிகளுக்கு இரத்த சேகரிப்பு பணிகளும் மேற்கொள்ளப்பட்டன.
இந்த பணிகள் 53 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதி பிரிகேடியர் H.H.A.S.P.K சேனாரத்ன அவர்களது வழிக்காட்டலின் கீழ் மேற்கொள்ளப்பட்டன. latest Nike release | Men's Footwear