Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

20th October 2022 19:46:33 Hours

பலாலியில் அமைந்துள்ள பாடசாலையில் உள்ள 63 பாடசாலை மாணவர்களுக்கு உலர் உணவு மற்றும் பரிசுப்பொதிகள் வழங்கல்

கம்பஹாவைச் சேர்ந்த திருமதி ஹர்ஷனி குணசேகர, திரு சித்திரசிறி, திரு ஹசித சமரசிங்க, திருமதி மஹேஷா சமரசிங்க, திருமதி மேகல ரொட்ரிகோ, திரு பிரசாத் லொகுபாலசூரிய ஆகியோரின் அனுசரணையுடன் 55 வது படைத் தலைமையகத்தின் 552 வது பிரிகேட் பிரிவினர் யாழ். பலாலியில் அமைந்துள்ள தர்மகேனி தமிழ்ப் பாடசாலை மற்றும் முகமாலை ஆர்சிடிஎம் பாடசாலையில் தெரிவு செய்யப்பட்ட 63 பாடசாலை மாணவர்கள் மற்றும் 12 ஆசிரியர்களுக்கு இலவசப் பாடசாலை உபகரணங்கள் மற்றும் உலர் உணவுப் பொதிகள் மற்றும் உணவுப் பொதிகள் திங்கட்கிழமை (17) வழங்கப்பட்டன.

55 வது படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் பிரசன்ன குணரத்ன அவர்களின் வழிகாட்டல் மூலம் 552 வது பிரிகேட் தளபதியான பிரிகேடியர் விஜயநாத் ஜயவீர அவர்களை தகுதியானவர்களுக்கு இப் பொதி வழங்கல் திட்டத்தை ஒழுங்கமைத்தார். இந்த ஏற்பாட்டின் போது மேற்கூறிய பொதிகள் உள்ளடங்கிய ரூபாய் 2,500 பெறுமதியான ஒவ்வொரு பொதியும் அந்த நன்கொடையாளர்களின் பிரதிநிதிகள் மற்றும் பிரதம அதிதியாக கலந்து கொண்ட 552 பிரிகேட் தளபதியாலும் வழங்கப்பட்டது.

1 வது இயந்திரவியல் காலாட்படை படையணியின் கட்டளை அதிகாரி லெப்டினன் கேணல் ரோஹன திலகரத்ன, 23 வது கெமுனு ஹேவா படையணியின் கட்டளை அதிகாரி மேஜர் ருக்மல் ரத்நாயக்க மற்றும் 552 வது பிரிகேடின் சிவில் விவகார அதிகாரி மேஜர் ருவான் தெஹிகல ஆகியோர் இந்த சமூகம் சார்ந்த செயற்திட்டத்திற்கு சகல உதவிகளையும் வழங்கினர்.