Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

பரா பெட்மிண்டனில் கஜபா படையணியின் வீரர்கள் சாம்பியன்

பரா- பெட்மிண்டன் சம்பியன்ஷிப் போட்டியில் கஜபா படையணியின் வீரர்கள் 03 தங்கப் பதக்கங்கள், ஒரு வெள்ளிப் பதக்கம் மற்றும் 3 வெண்கலப் பதக்கங்களை வென்று வெற்றி பெற்றதுடன் இப்போட்டியில் விஜயபாகு காலாட் படையணி வீரர்கள் இரண்டாம் இடத்தை தழுவினர்.

இராணுவத்தின் 23 வது படையணிகளிடையிலான பரா போட்டி 2022 க்கு இணையாக, கெமுனு ஹேவா படையணியின் தலைமையக படையலகு, ஜூலை 14-15 திகதிளில் பனாகொடை உள்ளக விளையாட்டரங்கில் படையணிகளுக்கிடையிலான பரா பெட்மிண்டன் போட்டியை ஏற்பாடு செய்தது.

ஜூலை 15 அன்று நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் இராணுவ இசைக்குழு மற்றும் நுன்கலை பணிப்பகத்தின் பணிப்பாளர் பிரிகேடியர் ரோஹான் பெஞ்சமின் அவர்கள் பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.

கெமுனு ஹேவா படையணியின் நிலைய தளபதி பிரிகேடியர் ஜானக விமலரத்ன, சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் விருது வழங்கும் நிகழ்வில் கலந்துகொண்டனர்.