2020 ஜப்பான் டோக்கியோவில் நடைபெற்ற பரா ஒலிம்பிக் போட்டிகளில் தங்கப்பதக்கம் வென்ற கஜபா படையணியின் ஆணையற்ற அதிகாரி 1 தினேஷ் பிரியந்த ஹேரத், வெங்கள பதக்கம் வென்ற இலங்கை இராணுவப் பொலிஸ் படையின் கோப்ரல் துலான் கொடிவக்குவுடன் கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு செவ்வாய்க்கிழமை (7) வருகை தந்த போது சிரேஸ்ட இராணுவ அதிகாரிகள், விளையாட்டுத்துறை அமைச்சின் அதிகாரிகள் மற்றும் சிறப்பு விருந்தினர்களால் வரவேற்கப்பட்டனர்.
வொரண்ட அதிகாரி 1 டோக்கியோவில் நடைபெற்ற பரா ஒலிம்பிக் போட்டிகளில் ஈட்டி எறிதலில் தங்கப் பதக்கம் வெல்லும் கனவை நனவாக்கிகொண்டு மரியாதை மற்றும் பாராட்டுக்களை பெற்றுக்கொண்ட உலகத் தரம் வாய்ந்த விளையாட்டு வீரரானார். தொற்றுநோய் அச்சுறுத்தல் காரணமாக, மட்டுப்படுத்தப்பட்ட எண்ணிக்கையிலானவர்கள் மட்டுமே விமான நிலையத்திற்கு அழைக்கப்பட்டிருந்தனர். இதன்போது இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வாவைப் பிரதிநிதித்துவப்படுத்தி பிரதிநிதித்துவப்படுத்தி, இராணுவ பதவி நிலை பிரதானி மேஜர் ஜெனரல் பிரியந்த பெரேரா மற்றும் சில சிரேஸ்ட அதிகாரிகளும் நிகழ்வில் கலந்துகொண்டிருந்தனர்.
கடந்த ரியோ பரா ஒலிம்பிக் போட்டிகளில் வெண்கலப் பதக்கம் வென்ற இராணுவ வொரண்ட் அதிகாரி 1 தினேஷ் பிரியந்த ஹேரத், ஒன்பது பேர் அடங்கிய டோக்கியோ பரா ஒலிம்பிக் விளையாட்டு -2020 க்கான இலங்கை அணியின் தலைவராக செயற்பட்டார்.
தங்கப் பதக்கம் வென்ற கஜபா படையணியின் தினேஷ் பிரியந்த ஹேரத் (ஈட்டி எறிதல்) இலங்கை இலேசாயுத காலாட்படையின் (வில்வித்தை) கார்ப்ரல் எம்.ஜி. சம்பத் பண்டார, விஜயபா காலாட்படை படையின் சார்ஜென்ட் சம்பத் ஹெட்டியாராச்சி, இலங்கை தேசிய பாதுகாவலர் படையின் (குண்டு எறிதல்) கோப்ரல் பாலித பண்டாரா. விஷேட படை சார்ஜென்ட் மகேஷ் ஜெயக்கொடி (படகோடட்டும் போட்டி), இலங்கை பீரங்கி படையின் சார்ஜென்ட் ரஞ்சன் தர்மசேனா (ஈட்டி எறிதல்), இலங்கை இராணுவப் பொலிஸ் படையின் (ஈட்டி எறிதல்) கோப்ரல் சமிதா துலன் ஆகியோர் அவர்களது பயிற்சியாளர்கள் மற்றும் நிர்வாக குழு அதிகாரிகளுடன் தேசிய விளையாட்டு தேர்வு குழுவிற்கு அழைக்கப்பட்டு அக்குழுவின் தலைரவரும் பாதுகாப்பு பதவி நிலை பிரதானியும் இராணுவ தளபதியும் கொவிட் – 19 தடுப்புக்கான தேசிய செயல்பாட்டு மையத்தின் தலைவருமான ஜெனரல் ஷவேந்திர சில்வா அவர்களின் அறிவுறுத்தல்கள் மற்றும் பாரட்டுகளை போட்டியில் பங்குபற்றுவதற்கு முன்னர் பெற்றுக்கொண்டனர்.
டோக்கியோ பரா ஒலிம்பிக்ஸ் -2020 விளையாட்டுப் போட்டிகளில் 22 விளையாட்டுகளில் 539 பதக்கப் போட்டிகளில் சுமார் 4,400 விளையாட்டு வீரர்கள் பங்கேற்றனர்.
இலங்கையிலிருந்து ஆறு விளையாட்டு வீரர்கள் பங்குபற்றியிருந்த நிலையில் அவர்களில் இருவர் நேரடியாக தகுதிகளைப் பெற்றிருந்தமை சிறப்பம்சமாகும். அதே நேரம் பெண் போட்டியாளரான குமுது பிரியங்கா மட்டுமே டோக்கியோ விளையாட்டுப் போட்டிக்கு யுனிவர்சிட்டி தரத்திற்கு தகுதி பெற்றிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. அட்லான்டாவில் 1996 இல் இடம்பெற்ற பரா ஒலிம்பிக் போட்டிகளில் அறிமுகமான இலங்கையின் போட்டியாளர்கள் பெருமளவில் மேம்பாடடைந்துள்ளனர். விளையாட்டு வீரர்களான பிரதீப் சஞ்சய (லண்டன் 2012) மற்றும் தினேஷ் பிரியந்த ஹேரத் (ரியோ 2016) போட்டிகளில் பங்கேற்று இரண்டு வெண்கலப் பதக்கங்களை வென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.