Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

15th February 2022 19:23:15 Hours

பயிலுனர் ஆசிரியர்களுக்கான நிகழ்வில் 51 வது படை பிரிவு தளபதி ஆரம்ப உரை

யாழ். பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் 51 வது படைப் பிரிவு தளபதி மேஜர் ஜெனரல் சந்தன விக்ரமசிங்க யாழ்ப்பாணத்தில் உள்ள தேசிய கல்வியியற் கல்லூரியில் ஏறத்தாழ 750 பயிலுனர் ஆசிரியர்களின் பங்கேற்புடன் நடைபெற்ற செயலமர்வில் 'தலைமைத்துவம்' என்ற தலைப்பில் ஆரம்ப உரையொன்றை நிகழ்த்தினார். கல்லூரியின் பயிற்சி குழு எண் 18, 19 மற்றும் 20 களின் கீழான தமிழ், முஸ்லிம் மற்றும் சிங்கள இன மாணவர்கள் இந்நிகழ்வில் பங்குபற்றினர்.

ஆரம்ப அமர்வின் போது, மேஜர் ஜெனரல் சந்தன விக்கிரமசிங்க தலைமைத்துவம், இராணுவத் தலைமைத்துவம், முகாமையாளர் மற்றும் தலைவர், தலைமைத்துவ வழிகாட்டுதல்கள், தலைமைத்துவம் மற்றும் தலைமைத்துவத் திறன்களுக்கான உணர்ச்சி நுண்ணறிவு ஆகியவற்றுடன் தொடர்புடைய பண்புகளை தலைவர்கள் பின்பற்ற வேண்டிய விதம் தொடர்பில் எடுத்துரைத்தார்.

மேஜர் ஜெனரல் சந்தன விக்ரமசிங்க கல்லூரிக்கு வருகைத் தந்த போது யாழ்ப்பாணம் தேசிய கல்வியியற் கல்லூரியின் வேந்தர் திரு சுப்பிரமணியம் பரமானந்தன் மற்றும் ஏனைய சிரேஷ்ட ஊழியர்களினால் பாரம்பரிய முறைப்படி அன்புடன் வரவேற்கப்பட்டார்.

யாழ். போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் க.நந்தகுமாரன், யாழ்ப்பாணம் தேசிய கல்வியியற் கல்லூரியின் சிரேஷ்ட ஆலோசனை சபை உறுப்பினர் டொக்டர் லயன் வி.தியாகராஜா, கோப்பாய் ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியின் அதிபர் திரு.வி.கருணாலிங்கம் மற்றும் 511 வது பிரிகேட் தளபதி பிரிகேடியர் ஜூட் பெர்னாண்டோ ஆகியோர் இந் நிகழ்வில் கலந்து கொண்டார்.