Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

24th May 2021 21:00:37 Hours

பயிலுனர் அதிகாரிகள் வழங்கல் அதிகாரி பாடநெறியை நிறைவு செய்தனர்

வழங்கல் பணிநிலை பாடநெறியின் முக்கிய பயிற்சிகளில் ஒன்றான வோககோனர் பயிற்சி வழங்கல் பணிநிலை பாடநெறியின் இல – 7 இன் மாணவ அதிகாரிகள் 2021 மே 07 முதல் 2021 மே 13 வரையான காலப்பகுதியில் வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளனர்.

செயல்பாட்டு மற்றும் வழங்கல் திட்டங்களுக்கிடையில் ஒரு நெருக்கமான ஒற்றுமையின் முக்கியத்துவம், உகந்த முடிவுகளை அடைய கிடைக்கக்கூடிய வழங்கல் வளங்களை நியாயமான முறையில் பயன்படுத்துவதன் முக்கியத்துவம், எளிய மற்றும் நெகிழ்வான வழங்கல் திட்டங்களின் தேவை போன்றவை பயிற்சியில் உள்ளடக்கப்பட்டிருந்த முக்கிய அம்சங்கள் ஆகும்.

பயிற்சியானது தலைமை பயிற்றுவிப்பாளரினது இறுதி விளக்கத்துடன் நிறைவிற்கு வந்தது.

இராணுவ வழங்கல் பயிற்சி பாடசாலையின் தளபதி பிரிகேடியர் ரஞ்சன் ஜயசேகர, தலைமை பயிற்றுநர் கர்ணல் மொஹான் பிரேமரத்ன ஆகியயோர் பயிற்சி பகுதிக்கு விஜயம் செய்து மாணவர் அதிகாரிகளின் செயல்திறனை மேற்பார்வையிட்டது அவர்களுடன் அனுபவத்தை பகிர்ந்துக் கொண்டு கருத்தியல் வழிகாட்டலைகளையும் வழங்கினர்.