Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்கள்

logo logo logo

06th March 2020 15:47:29 Hours

பயிலுனர் அதிகாரிகள் இராணுவ தளபதியை இராணுவத் தலைமையகத்தில் சந்திப்பு

புத்தள அதிகாரிகள் துறைசார் அபிவிருத்தி நிலையத்தில் படைப் பிரிவு தளபதிகள் பாடநெறியினை தொடரும் பட்டதாரிகள் குழு தங்களது பயிற்சியின் ஒரு பகுதியாக பாதுகாப்பு தலைமை பிரதானியும் இராணுவத் தளபதியுமான லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா மற்றும் தலைமை பதவி நிலை அதிகாரிகள் ஆகியோரை இராணுவத் தலைமையகத்தில் வைத்து இன்று 6 ஆம் திகதி சந்தித்தனர். நாட்டின் பெரிய ஒழுங்கமைப்பான இராணுவத்தின் செயற்பாட்டு கொள்கைகளை விளங்கிகொள்ளும் நோக்கமாக இந்ந சந்திப்பு காணப்படுகின்றது.

குறித்த 23 பயிலுனர் அதிகாரிகள் இராணுவ தளபதியின் அலுவலகத்தில் வைத்து பாதுகாப்பு தலைமை பிரதானியும் இராணுவத் தளபதியுமான லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா அவர்களின் தலைமையிலான சிரேஷ்ட அதிகாரிகளினால் அவர்களின் கட்டளை தந்திரோபாய அறிவை ஊக்குவிக்கு முகமாக நேர்காணல் காணப்பட்டது.

இராணுவத் தளபதியுமான லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா அவர்கள் சமகால பட்டாலியன் கட்டளைத் தளபதியின் வகிபாகம் தொடர்பாக அவர்களிடம் விளக்கமளித்த்தோடு பயிற்சிகாலத்தில் அவ்கள் பெற்றுக்கொள்ளக்கூடிய விடயங்கள் சம்பந்தமாகும் எடுத்துக்கூரினார். அதன் பின்னர் குறித்த பயிலுனர் அதிகாரிகள் தமது விஜயத்தின் ஞாபகர்தமாக இராணுவத் தளபதியுடன் குழு புகைப்படத்தில் கலந்து கொண்டனர்.

அதன் பின்னர் அவர்கள் பிரதி இராணுவ பதவி நிலை பிரதானி மேஜர் ஜெனரல் நிர்மல் தர்மரத்ன ,இலங்கை இராணுவ தொண்டர் படையணி தளபதி மேஜர் ஜெனரல் ஜகத் குணவர்தன, காலாட் படையணி பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் மனோஜ் முதநாயக்க,போர்கருவி ஜெனரல் மேஜர்ஜெனரல் துமிந்த சிறிநாக, இராணுவ நிறைவேற்று பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் சூள அபேநாயக்க, இராணுவ செயலாளர் மேஜர் ஜெனரல் ஜயசாந்த கமகே,திட்டமிடல் பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் கே.டபள்யு அப்ரூ மற்றும் பயிற்சி பணிப்பாளர் பிரிகேடியர் ஐ.எச்.என்.எம்.எம் ஹேரத் உள்ளிட்ட பல முக்கியமான சிரேஷ்ட அதிகாரிகளை இராணுவத் தலைமையக்கில் சந்தித்தனர்.

அதிகாரிகள் துறைசார் அபிவிருத்தி நிலையத்தின் தளபதி மேஜர் ஜெனரல் ஜயநாத் ஜயவீர மற்றும் அதிகாரிகள் துறைசார் அபிவிருத்தி நிலையத்தின் தலைமை பயிற்றுவிப்பாளர் ஆகியோர்களும் இச் சந்திப்பில் கலந்து கொண்டனர்.