30th August 2021 11:25:35 Hours
அரசபுரக்குள 66 வது படைப்பிரிவின் பயிற்சிப் பாடசாலையில் புதிதாகக் கட்டப்பட்ட பௌத்த விகாரை நிக்கினி பௌர்ணமி (22) தினத்தன்று 66 வது படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் அஜித் திசாநாயக்கவால் திறந்து வைக்கப்பட்டது.
பயிற்சி பாடசாலையின் பிரதம பயிற்சி ஆலோசகர் லெப்டினன்ட் கேணல் பி முத்துநாயக்க அவர்களின் அழைப்பின் பேரில் பயிற்சியாளர்கள் மற்றும் பயிற்றுவிப்பாளர்களின் ஆன்மீக நிவாரணத்திற்காக அமைக்கப்பட்ட மதஸ்தலம் படைப்பிரிவு தளபதியினால் திறந்து வைக்கப்பட்டது.
நாவற்குளி விகாரையின் தலைமை தேரர் நிகழ்ச்சியில் கலந்து சிறப்பித்து ஆன்மீக சிறப்புரை ஆற்றினார்.
பிரிகேட் தளபதிகள், சிரேஸ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் சுகாதார வழிகாட்டுதல்களைப் பின்பற்றி நிகழ்வை சிறப்பித்தனர்.