01st May 2025 20:40:07 Hours
இலங்கை இராணுவம் 2025 ஏப்ரல் 28 அன்று இராணுவத் தலைமையகத்தில் இராணுவ பிரதி பதவி நிலை பிரதானி மேஜர் ஜெனரல் ஏ.எச்.எல்.ஜி. அமரபால ஆர்.டபிள்யூ.பி. ஆர்.எஸ்.பீ. என்.டி.சீ பீஎஸ்சீ அவர்களின் வழிகாட்டுதலின் கீழ், வருகை தந்த ரஷ்ய இராணுவக் குழுவுடன் ஆரம்ப திட்டமிடல் மாநாடு இடம் பெற்றது.
இந்த அமர்வின் போது, பயங்கரவாத எதிர்ப்பு திறன்களை மேம்படுத்துவதற்கான தந்திரோபாய நிபுணத்துவம், செயல்பாட்டு அனுபவங்கள் மற்றும் சிறந்த நடைமுறைகளைப் பகிர்ந்து கொள்வதை நோக்கமாகக் கொண்டு கலந்துரையாடல்களில் ஈடுபட்டனர். மேலும், இரு நாடுகளுக்கும் இடையே அதிக ஒத்துழைப்பை ஊக்குவித்தல், திறனை வலுப்படுத்துதல் மற்றும் பரஸ்பர புரிதலை ஆழப்படுத்துதல் ஆகியவற்றில் இரு தரப்பினரும் தங்கள் உறுதிப்பாட்டைப் பகிர்ந்து கொண்டனர்.
நிகழ்வின் நிறைவில் நினைவு சின்னங்கள் பரிமாறிக் கொண்டதுடன் நிகழ்வு நிறைவடைந்தது.