19th July 2021 11:00:13 Hours
பம்பேமடு காலாட்படை பயிற்சி பாடசாலையில் இராணுவம் தொடர்பிலான மூன்று மாதகால அடிப்படை பயிற்சிகளை நிறைவு செய்துக்கொண்ட முதலாவது குழுவினரின் விடுகை அணிவகுப்பு நிகழ்வு வியாழக்கிழமை (15) நடைபெற்றது.
இராணுவ பயிற்சி பணிப்பகம் , ஆட்சேர்ப்பு பணிப்பகம் மற்றும் புத்தளம் இராணுவ ஆட்சேர்ப்பு பயிற்சி கிளை ஆகியவற்றினால் வழங்கப்பட்ட அறிவுரைகளுக்கமை புதியவர்களுக்கான பயிற்சி அளிக்கப்பட்டது. மேற்படி பயிற்சியின் நிறைவம்சமாக பம்பைமடு காலாட்படை பயிற்சி பாடசாலையின் பிரதம ஆலோசகர் மேஜர் சந்தன ஜயசிங்கவால் உரை நிகழ்த்தப்பட்டது.
மேற்படி பயிற்சிகளின் போது தனிப்பட்ட வகையில் எழுத்து மற்றும் பிரயோக செயற்பாடுகளில் சிறந்த திறன்களை வெளிப்படுத்திய இலங்கை இராணுவ சேவைப் படையின் பயிற்சி சிப்பாய் ஆர்.எம்.ஐ.டி.ரத்நாயக்க சிறந்த பயிற்சி சிப்பாயாக தெரிவு செய்யப்பட்டார். குறித்த பாடநெறியின் சிறந்த துப்பாக்கிச் சூட்டு வீரராக இலங்கை இராணுவ பொலிஸ் படையின் பயிற்சி சிப்பாய் டபிள்யூ.ஏ.என்.எஸ். ஜயசூரிய தெரிவு செய்யப்பட்டதோடு சிறந்த தேக ஆரோக்கியம் கொண்ட பயிற்சி சிப்பாய் இலங்கை இராணுவ சேவை படையின் எஸ்.எஸ்.ஆர். ஜயரத்ன தெரிவு செய்யப்பட்டார்.