Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

21st June 2023 23:34:16 Hours

பனாகொட விருகெகுலு பிள்ளைகளின் விளையாட்டுப் போட்டிக்கு சேவை வனிதையர் தலைவி பாராட்டு

பனாகொட ‘விருகெகுலு’ முன்பள்ளியில் உள்ள சிறுவர்களின் வருடாந்த விளையாட்டுப் போட்டி செவ்வாய்க்கிழமை (ஜூன் 20) பங்கொட உடற்பயிற்சி கூடத்தில் “காடு” என்ற தொனிப்பொருளில் நடைபெற்றது.

இராணுவ சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி ஜானகி லியனகே பிரதம விருந்தினராக இந்நிகழ்வில் கலந்து கொண்டார். பிரதம அதிதியை பிள்ளைகள் பூங்கொத்துகள் வழங்கி வரவேற்றனர்.

பிள்ளைகள் தேனீக்கள், பூ வேலி, சிறிய விவசாயிகளின் விளையாட்டு, விடாமுயற்சி எறும்பு விளையாட்டு, மாக்கோ கிளி விளையாட்டு, முச்சக்கரவண்டி சைக்கிள் விளையாட்டு, வேடிக்கையான தவளை விளையாட்டு போன்ற அம்சங்கள் உட்பட பல்வேறு விளையாட்டுகளில் கலந்து கொண்டனர்.

விளையாட்டுப் போட்டியின் போது பிள்ளைகளின் பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான சிறப்பு நிகழ்வும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அன்றைய நிகழ்வு, வேடிக்கை மற்றும் இசைக்குழு காட்சியால் நிரப்பப்பட்டது, இந்நிகழ்வில் கலந்து கொண்ட சிறுவர்களுக்கு பிரதம விருந்தினர் பரிசில்களை வழங்கினார்.

மேற்குப் பாதுகாப்புப் படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் டிஎம்கேடிபி புஸ்ஸெல்ல ஆர்டபிள்யுபீ ஆர்எஸ்பீ, சிரேஸ்ட சேவை வனிதையர் பிரிவு உறுப்பினர்கள், சிரேஸ்ட அதிகாரிகள், அதிகாரிகள், முன்பள்ளி ஆசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் பிள்ளைகள் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.