Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

10th August 2021 15:34:05 Hours

பனாகொட தடுப்பூசி மையத்தினால் முழு நாட்டிற்கும் பயன்

பனாகொட போதி ராஜராமையில் (இராணுவக் விகாரை) இராணுவ வைத்திய பணியாளர்களால் பொதுமக்களுக்கு நெருக்கடிகள் இல்லாத வகையில் முன்னெடுக்கும் தேசிய தடுப்பூசி வேலைத்திட்டத்தை திங்கட்கிழமை (09) மேற்கு பாதுகாப்பு படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் சுஜீவ செனரத் யாபா மேற்பார்வையிட்டார்.

பாதுகாப்பு பதவி நிலை பிரதானியும் இராணுவ தளபதியும் கொவிட் – 19 பரவல் தடுப்புக்கான தேசிய செயல்பாட்டு மையத்தின் தலைவருமான ஜெனரல் ஷவேந்திர சில்வா இராணுவ தலைமையக வைத்திய பணிப்பகத்தின் பணிப்பாளர் கேணல் சவீன் சேமகே ஆகியோருடைய மேற்பார்வையில் படையினர் தங்களது முழு அர்ப்பணிப்புடன் இப்பணிகளை முன்னெடுத்து வருவதுடன் அதிமேதகு ஜனாதிபதி அவர்களின் பணிப்புரைக்கமைய அஸ்ட்ராசெனிகா மற்றும் சினோபார்ம் தடுப்பூசிகளின் இரண்டாம் மாத்திரையினை வழங்கும் பணிகளையும் முன்னெடுத்து வருகின்றனர்.

கொவிட் - 19 பரவலுக்கு எதிரான ஜனாதிபதி செயலணியின் அண்மைய சந்திப்பின் போது ஜனாதிபதியால் வழங்கப்பட்ட அறிவுரைகளுக்கமைய உடல் ஊனமுற்றோர், பலவீனமான மற்றும் முதியவர்களுக்கும், நோய் பாதிப்புக்கு உள்ளானவர்களுக்கும் முன்னுரிமை அளிக்கப்பட்டது.

அதேபோல, இராணுவத்தால் நிர்வகிக்கப்படும் நாடளாவிய தடுப்பூசி மையங்கள் திட்டமிட்டபடி. 24 மணி நேரமாக தடுப்பூசி வழங்கள் செயற்பாடுகளை முன்னெடுக்கின்றனர். விகார மகா தேவி பூங்காவின் திறந்தவெளி அரங்கு மற்றும் தியத உயன ஆகிய பகுதிகளில் பெரும் அளவிலானோர் தடுப்பூசிகளை பெற்றுக்கொள்வதற்காக வருகை தருகின்றனர்.