Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

21st November 2021 08:40:58 Hours

பனாகொடையில் பூஸ்டர் தடுப்பூசி வழங்கல்

கொவிட்- 19 பரவலை தடுப்பதற்கான தேசிய செயல்பாட்டு மையத்தின் தலைவரும் பாதுகாப்புப் பதவி நிலை பிரதானியும் இராணுவத் தளபதியுமான ஜெனரல் ஷவேந்திர சில்வாவின் வழிகாட்டுதலின் பேரில் பனாகொட போதி இராஜாராமய (இராணுவ விகாரையில்) புதன்கிழமை (17) முதல் மேல் மாகாணத்தை சேர்ந்த 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கான பூஸ்டர் தடுப்பூசி வழங்கப்பட்டது.

அரசாங்கக் கொள்கையின் பிரகாரம் பூஸ்டர் தடுப்பூசி வழங்கும் தேசிய திட்டம் ஆரம்பிக்கப்பட்டதை அடுத்து, மேற்கு பாதுகாப்புப் படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் சுஜீவ செனரத் யாப்பாவின் மேற்பார்வையின் கீழ் இதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டன.