Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

23rd October 2021 12:00:16 Hours

பனாகொடையில் தடுப்பூசி வழங்கும் திட்டம் மேலும் விரிவுபடுத்தல்

பனாகொடை, போதிராஜாராம விகாரையில் நடைபெற்று வரும் இராணுவ தடுப்பூசி வழங்கும் திட்டத்திற்கான வசதிகளை விரிவுபடுத்தும் பொருட்டு, கல்கிசை லயன்ஸ் கழகம் வெள்ளிக்கிழமை 22 ம் திகதி பனாகொடை இராணுவ வைத்தியசாலையில் பயன்படுத்துவதற்கு மருத்துவ உபகரணங்களை பரிசாக வழங்கியது.

குறித்த உபகரண தொகுதியில் முகக் கவசங்கள், தொற்று நீக்கி திரவியங்கள், தனநபர் பாதுகாப்பு அங்கிகள் மற்றும் கையுறைகளும் காணப்பட்டன.

மேற்கு பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் பிரிகேடியர் பொது பணி , லயன்ஸ் கழகத்தின் தலைவர் திரு சஞ்சீவ வர்ணகுலசூரிய, லயன்ஸ் கழகத்தின் செயலாளர் திரு நுவன் பெரேரா , மற்றும் சில லயன்ஸ் கழக உருப்பினர்களும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.