Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

09th October 2021 20:35:59 Hours

பதுளையிலுள்ள 112 வது பிரிகேட் படையினரால் சந்தஹிரு சேய வாகன தொடரணிக்கு உதவி

மத்திய பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் 11 வது படைப்பிரிவின் 112 பிரிகேட் படையினரால் சந்திஹிரு சேயவின் புனித தூபியில் வைக்கப்படவிருக்கும் சூடாமாணிக்கத்தை (கலசம்) எடுத்துச் செல்லும் வாகனம் வியாழக்கிழமை (7) பதுளை மாவட்ட முத்தியங்கணை பகுதியை சென்றடைந்த போது நடைபெற்ற நிகழ்வுகளுக்குஉதவிகள் வழக்கப்பட்டன.

கடந்த ஓகஸ்ட் மாதம் 5 ஆம் திகதி மகா சங்கத்தினரின் ஆசிர்வாதத்துடன் உனுப்பிட்டிய கங்காராமய விகாரையில் ஆரம்பிக்கப்பட்ட சந்தஹிரு சேய தூபுக்கான கலச ஊர்வலம் நாட்டின் 18 மாவட்டங்களில் காணப்படும் 48 விகாரைகளுக்கு 47 நாட்களுக்குள் எடுத்துச் செல்லப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மத்திய பாதுகாப்பு படைத் தலைமையக தளபதியின் வழிகாட்டலின் கீழ் 11 வது படைப்பிரிவின் தளபதி மற்றும் 112 பிரிகேட் தளபதி ஆகியோரின் மேற்பார்வையில் குறித்த விடயம் படையினரால் முன்னெடுக்கப்பட்டது.