Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

04th February 2022 13:05:25 Hours

பதவி உயர்வு பெற்ற சிரேஷ்ட பிரிகேடியர்கள் இராணுவத் தளபதியிடமிருந்து பதவிச் சின்னம் மற்றும் அறிவுரைகளைப் பெறுகின்றனர்

வரலாற்று சிறப்புமிக்க 74 வது தேசிய சுதந்திர தினத்தை முன்னிட்டு மேஜர் ஜெனரல் பதவிக்கு தரம் உயர்த்தப்பட்டுள்ள இராணுவத்தின் மேலும் ஏழு சிரேஷ்ட பிரிகேடியர்கள் இன்று (3) பிற்பகல் ஶ்ரீ ஜயவர்தனபுரவில் உள்ள பாதுகாப்பு பதவி நிலை பிரதானியும் இராணுவத் தளபதியுமான ஜெனரல் ஷவேந்திர சில்வா அவர்களை சந்தித்து அவர்களின் பதவிச் சின்னங்களையும், தளபதியின் வாழ்த்துக்களையும் பெற்றுக்கொண்டனர்.

தேசிய பாதுகாப்பு கல்லூரி தளபதியான இலங்கை கவச வாகன படையணியின் மேஜர் ஜெனரல் மகேந்திர பெர்னாண்டோ,ஆளனி நிர்வாக பணிப்பாளர் நாயகமான பொறியியலாளர் படையணியின் மேஜர் ஜெனரல் உதயகுமார,இராணுவ தலைமையக பாதுகாப்பு ஒருங்கிணைப்பாளரான கஜபா படையணியின் மேஜர் ஜெனரல் லால் விஜேதுங்க, 52 வது படைப் பிரிவின் தளபதியான இலங்கை இலேசாயுத காலாட்படையணியின் மேஜர் ஜெனரல் சமந்த விக்கிரமசேன, இலங்கை மின்சார மற்றும் இயந்திர பொறியியல் பணிப்பாளர் நாயகமான இலங்கை மின்சார மற்றும் இயந்திர பொறியியல் படையணியின் மேஜர் ஜெனரல் தீபால் ஹதுருசிங்க, இலங்கை இராணுவ பொதுச் சேவை படையணியின் மேஜர் ஜெனரல் சானக மெத்தானந்த, இலங்கை இராணுவ கல்லூரியின் தளபதியான இலங்கை கவச வாகன படையணியின் மேஜர் ஜெனரல் நலிந்த நியங்கொட ஆகிய ஏழு சிரேஷ்ட பிரிகேடியர்கள் இவ்வாறு அடுத்த தரத்திற்கு தரம் உயர்த்தப்பட்டுள்ளனர்.

ஜெனரல் ஷவேந்திர சில்வா அவர்கள் ஏழு பேருக்கும் தனித்தனியாக வாழ்த்துக்களையும் தெரிவித்துடன் அவர்கள் ஒவ்வொருவருக்கும் புதிய மேஜர் ஜெனரல் சின்னத்தை அணிவித்து அதிகாரத்தின் அடையாள வாளை ஒப்படைத்தார். ஜெனரல் ஷவேந்திர சில்வா, ஏழு புதிய மேஜர் ஜெனரல் குழுவிற்கு அறிவுரை வழங்குகையில், இந்த மதிப்புமிக்க இரண்டு நட்சத்திரத் தரத்திற்கு உயர்வு பெறுவது என்பது அவர்களின் கடின உழைப்பு, அர்ப்பணிப்பு மற்றும் உங்கள் உயர்ந்த செயல்திறன் ஆகியவற்றின் பிரதிபலிப்பாகும் என்றார்.

"இந்தப் பதவி உயர்வு உங்கள் பணிமூப்பு , பாடநெறி முதல் தகுதி அல்லது பிரத்தியேக நிலை ஆகியவற்றை அடிப்படையாக மட்டும் கருத்தில் கொள்ளாமல், மே 2009 க்கு முன்னர் மனிதாபிமான நடவடிக்கைகளிலும் உங்கள் அர்ப்பணிப்புத்தன்மையைக் கருத்தில் கொண்டும் தளபதிகளாக பயிற்றுனர்களாக, பணிப்பாளர்களாக, பதவி நிலை அதிகாரிகளாக நீங்கள் எவ்வளவு சிறப்பாகப் பொறுப்புகளைச் செய்தீர்கள் என்பதைக் கருத்தில் கொண்டு வழங்கப்படுகிறது. இந்த 'மேஜர் ஜெனரல்' தரம், தொழில் வாழ்க்கையில் அங்கீகாரத்தின் மிக உயர்ந்த நிலையில் காணப்படுவதால் திறமையானவர்கள் மட்டுமே இந்த தரத்தை அடைய முடியும் என்பதால் அதற்குரிய கண்ணியம், அங்கீகாரம் மற்றும் பொறுப்புடன் பராமரிக்கப்பட வேண்டும் என்று ஜெனரல் ஷவேந்திர சில்வா மேலும் கூறினார்.