Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

30th October 2019 09:17:07 Hours

பதவிநிலை கடமைகள் தொடர்பாக அதிகாரிகளுக்கு செயலமர்வு

கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தலைமையகத்திற்கு கீழ் இயங்கும் அரசபுரகுள பட்டாலியன் பயிற்சி நிலையத்தில் அதிகாரிகளுக்கு மூன்று நாள் பதவிநிலை கடமைகள் தொடர்பான செயலமர்வுகள் ஒக்டோபர் மாதம் 28 – 30 ஆம் திகதி வரை இடம்பெற்றன.

இந்த செயலமர்வுகள் 66 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதி பிரிகேடியர் மங்கள விஜயசுந்தர அவர்களது வழிக்காட்டலின் கீழ் 21 இளம் இராணுவ அதிகாரிகளுக்கு இடம்பெற்றன.

அதிகாரிகளுக்கு இந்த செயலமர்வின் மூலம் தங்களது திறமைகளை மேம்படுத்தும் விடயங்கள் தொடர்பாக விரிவுரைகள் மேற்கொள்ளப்பட்டன.

இந்த செயலமர்வின் இறுதி நாள் சான்றிதழ் வழங்கும் நிகழ்விற்கு பிரதம அதிதியாக 663 ஆவது படைத் தலைமையகத்தின் கட்டளை தளபதி கேர்ணல் K.L.S.S லியனகம அவர்கள் வருகை தந்து அதிகாரிகளுக்கு சான்றிதழ்களையும் வழங்கி வைத்து சிறப்பித்தார். Sports brands | Converse Chuck Taylor All Star Translucent - Women Shoes - 165609C