இலங்கை மின்சார மற்றும் இயந்திர பொறியியல் படையணியின் பணிநிலை சார்ஜண் யுபுன் அபேகோண் செவ்வாக்கிழமை (26) ஜேர்மனியில் நடைபெற்ற தடகல சாம்பியன்ஷிப் 100 மீற்றர் ஓட்டப்போட்டியில் 10.06 செக்கன்களில் ஓடிமுடித்து 2021 ஆம் ஆண்டு பதிவு செய்யப்பட்டிருந்த 10.15 செக்கன் சாதனையை முறியடித்து புதிய சாதனையை பதிவு செய்துள்ளார்.
இதன் மூலமாக தெற்காசிய 100 ஓட்டப்போட்டிகளில் பதிவு செய்யப்பட்டிருந்த சகல சாதனைகளையும் பணிநிலை சார்ஜண் யுபுன் அபேகோண் முறியடித்துள்ளார்.